Neere enthan kanmalai - நீரே எந்தன் கன்மலை - Christking - Lyrics

Neere enthan kanmalai - நீரே எந்தன் கன்மலை

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்
எல்லா சூழ்நிலையிலும்
மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை

மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான்
நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்
காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே
எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை
Neere enthan kanmalai - நீரே எந்தன் கன்மலை Neere enthan kanmalai - நீரே எந்தன் கன்மலை Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.