Oivu Naal Ithu - ஓய்வு நாள் இது - Christking - Lyrics

Oivu Naal Ithu - ஓய்வு நாள் இது

ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே

ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்

கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
Oivu Naal Ithu - ஓய்வு நாள் இது Oivu Naal Ithu - ஓய்வு நாள் இது Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.