Oh Sthiri Vith - ஓ ஸ்திரீ வித் தேசையா - Christking - Lyrics

    Oh Sthiri Vith - ஓ ஸ்திரீ வித் தேசையா

    ஓ ஸ்திரீ வித் தேசையா
    அன்புகூராய் துன்பம் தீராயோ

    வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
    வந்தெமை க்ருபைக் கண் பாராயோ

    ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
    அண்ணலே உமக் கபயமே
    ஓ ஸ்திரீ வித் தேசையா
    ஆதரித் திரங்க வேண்டுமே

    எத்தனை மனக் கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம்
    எந்தையே கைவிட்டுவிடாதேயும்
    ஓ ஸ்திரி வித் தேசையா
    எப்படியும் காத்தருள் மெய்யா

    ஆடுகள் சிதறிப்போச்சொ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
    பாடுபட்ட பட்சக் கோனாரே
    ஓ ஸ்திரீ வித்தேசையா
    காடுகளில் தேடிப் பாருமேன்

    மந்தையை க்ருபைக் கண் பாரும் சிந்தையில் துயரம் தீரும்
    சந்ததம் தொழுவம் சேருமேன்
    ஓ ஸ்திரீ வித் தேசையா
    வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே
    Oh Sthiri Vith - ஓ ஸ்திரீ வித் தேசையா Oh Sthiri Vith - ஓ ஸ்திரீ வித் தேசையா Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.