Puthu Vaazhvu Thandavarae - புதுவாழ்வு தந்தவரே - Christking - Lyrics

Puthu Vaazhvu Thandavarae - புதுவாழ்வு தந்தவரே

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்
Puthu Vaazhvu Thandavarae - புதுவாழ்வு தந்தவரே Puthu Vaazhvu Thandavarae - புதுவாழ்வு தந்தவரே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.