Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே - Christking - Lyrics

Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே

துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே

முன் அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைப்படுத்தினார்- இன்னும்
மகிமைப்படுத்துவார்

பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே- வானங்களை
திரைப்போல விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும்
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே- செங்கடல்
தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே
Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.