Muthairai muthirai yezhu muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை - Christking - Lyrics

    Muthairai muthirai yezhu muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    முத்திரை [G min T95 4/4]

    முத்திரை முத்திரை ஏழு முத்திரை
    இவைகளை திறப்பது யாரது
    இயேசு கிறிஸ்து தானது

    Muthairai muthirai yezhu muthirai
    Ivaigalai thirappadhu yaaradhu
    Yesu kiristhu thaanadhu

    வெள்ளை குதிரையில் ஒருவன்
    அந்தி கிறிஸ்து அவன்
    ஜெயிக்க வரும் ஒருவன்
    ஜனங்களை வஞ்சிப்பவன்
    போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்
    வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்

    Vellai kudhiraiyil oruvan
    Andhi kristhu avan
    Jeyikka varum oruvan
    Janangalai vanjippavan
    Poliyaai palar vandhu povaar
    Echarikkai vendum
    Vedham solvadhai nangu ariya vendum

    இது முத்திரை முதல் முத்திரை

    Idhu muthirai mudhal muthirai

    சிவப்பு குதிரையில் ஒருவன்
    அதிகாரம் கொண்டவன்
    பட்டயம் கையில் கொண்டவன்
    பலரை கொல்லும் ஒருவன்
    யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்
    இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்

    Sivappu kudhiraiyil oruvan
    Adhigaaram kondavan
    Pattayam kaiyil kondavan
    Palarai kollum oruvan
    Yuththa seidhigal ketkumbodhu echarikkai vendum
    Ivaigalellaam sambavikka vendum

    இந்த முத்திரை இரண்டாவது

    Indha muthirai irandaavadhu

    கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்
    தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்
    பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
    பட்டினியாலே துன்பம் உண்டாகும்

    Karuppu kudhiraiyil savaari seidhu oruvan varugindraan
    Tharaasai kaiyil yendhi kondu avane varugindraan
    Boomi engrum panjam undaagum
    Pattiniyaale thunbam undaagum

    இந்த முத்திரை மூன்றாவது

    Indha muthirai moondraavadhu

    நாலாம் முத்திரை உடைத்தபோது மங்கின நிறமுள்ள குதிரை
    மரணம் என்பது அவனது நாமம்
    மேற்கொள்ளுமே பலரை
    பஞ்சத்தாலும், போரினாலும், பூமி அதிர்ந்ததாலும்,
    கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும்
    மனிதனை மரணம் மேற்கொள்ளும்

    Naalaam muthirai udaitha podhu
    Mangina niramulla kudhirai
    Maranam enbadhu avanadhu naamam
    Merkollume palarai
    Panjathaalum porinaalum boomi adhirndhadhaalum
    Kollai noyin pidiyinaalum maranam merkollum
    Manidhanai maranam merkollum

    முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    Muthirai muthirai yezhu muthirai

    ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
    பலிபீடத்தின் கீழே
    இரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
    விண்ணப்பம் சென்றது மேலே
    தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
    உலகம் பகைத்திடும்
    கர்த்தரே தேவன் என்று போற்றினால்
    கொலையும் செய்திடும்

    Aindhaam muthirai udaithapodhu balibeedathil keezhe
    Ratha saatchiyaai maanda maandharin
    Vinnappam sendradhu mele
    Dhevanai thozhudhidum aathumaakkalai
    Ulagam pagaithidum
    Karthare dhevan endru potrinaal
    Kolaiyum seidhidum

    ஆறாம் முத்திரை உடைத்தபோது பூமியும் அதிர்ந்ததே
    சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
    விண்மீண் விழுந்ததே

    Aaraam muthirai udaithapodhu boomiyum adhirndhadhe
    Sooriyan karuthu sandhiran sivandhu vinmeen vizhundhadhe

    மனுஷ குமாரனின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார்
    மன்னாதி மன்னன் வருவதை பார்த்து மனிதர் புலம்பிடுவார் - பூமியின் மனிதர் புலம்பிடுவார்

    Manusha kumaaranin adaiyaalangal vinnil theriyudhu paar
    Mannadhi mannan varuvadhai paarthu manidhar pulambiduvaar
    Boomiyin manidhar pulambiduvaar

    இறுதி முத்திரை உடைந்தது
    பரலோகில் அமைதி நிலவியது
    பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
    ஆயத்தமாகும் ஒரு அமைதியது

    Irudhi muthirai udaindhadhu paralogil amaidhi nilaviyadhu
    Boomiyin nyaaya theerpukkaai aayathamaagum oru amaidhiyadhu

    முத்திரை முத்திரை ஏழு முத்திரை

    Muthirai muthirai yezhu muthirai
    Muthairai muthirai yezhu muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை Muthairai muthirai yezhu muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.