Ungal Thukkam Sandosamai - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - Christking - Lyrics

Ungal Thukkam Sandosamai - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே

கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார்

திராணிக்கும் மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் - நம்

அக்கினியில் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டாய்
Ungal Thukkam Sandosamai - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Ungal Thukkam Sandosamai - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.