Yesuvin Anbai Maranthiduvayo - இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ - Christking - Lyrics

Yesuvin Anbai Maranthiduvayo - இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கும் காட்சி
மனதில் நில்லாதோ

அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு

ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு
இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு
ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு

எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
Yesuvin Anbai Maranthiduvayo - இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ Yesuvin Anbai Maranthiduvayo - இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ Reviewed by Christking on 10:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.