En Aasaiyellam - என் ஆசையையெல்லாம் - Christking - Lyrics

    En Aasaiyellam - என் ஆசையையெல்லாம்

    Song: En Aasayellam
    Artist: J Janet Shanti
    Album: En Aasai Neer Thanayya Vol 1
    Licensed: Allan Joshua Prakash

    என் ஆசையையெல்லாம் அன்பர் இயேசுவாக
    மாறும் வேளையிலே இன்பம் பொங்கு தய்யா
    என் பாசமலரே என் நேச உயிரே
    என் ஆசையெல்லாம் நீர் தானே
    என் ஆசையெல்லாம் நீர் தானே-!

    1) திராட் சை ரசத்திலும் மதுரம்
    கிச்சிலி பழங்களிலும் இன்பம்
    நேசத்தால் சோகமடைந்தேனே
    ஆற்றிடும் தேற்றிடுமே - நாதா ஆற்றிடும் தேற்றிடுமே - என் ஆசை

    2) மாதளம் ரசத்திலும் இனிமை
    தூதாயீம் பழங்களிலும் புதுமை
    அக்கினி ஜுவாலை போன்ற அன்பு
    வெள்ளங்கள் தணிக்க முடியாது - அன்பே
    வெள்ளங்கள் தணிக்க முடியாது - என் ஆசை

    3) பரிமளத் தைலத்திலும் வாசனை
    முத்திரை மோதிரத்திலும் வலிமை
    மரணம் போல் வலிய உந்தன் நேசம்
    தண்ணீர்கள் அவிக்க முடியாது - நாதா
    தண்ணீர்கள் அவிக்க முடியாது - என் ஆசை

    4) தேன்கூட்டு தேனைப் போல சுவைப்பேன்
    துயதான பாலை போல பருகுவேன்
    உந்தன் அன்பை பருகி மகிழ்ந்தேனே
    இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே - என் அன்பே
    இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே - என் ஆசை


    En Aasaiyellam - என் ஆசையையெல்லாம் En Aasaiyellam - என் ஆசையையெல்லாம் Reviewed by Christking on September 08, 2018 Rating: 5
    Powered by Blogger.