Nesare um - நேசரே உம்

    Nesare um - நேசரே உம்

    Music: N.David Selvam
    Lyric and Tune: N.David Selvam
    Guitars: Pharez
    Harmony: Anand, Ala B Bala

    நேசரே உம் பாதத்தை நோக்கியே அமர்ந்தேனே
    இயேசுவே உம் அன்பையே வேண்டியே வந்தேனே!

    உம்மைப்போல யாரும் இல்ல இந்த உலகிலே
    என்னைத் தேற்ற யாரும் இல்ல இந்த உலகிலே
    நீர் வாருமே! பெலன் தாருமே!
    உம் கிருபையால் என்னைத் தேற்றுமே! - (2)

    1) உடைக்கப்பட்ட பாத்திரமாய்
    உருக்குலைந்த வேளையிலே தாங்கினீர் - என்னை தாங்கினீர்
    ஒதுக்கப்பட்ட வாலிபனாய்
    உலகம் என்னைத் தள்ளியபோது தூக்கினீர் - உம் கரத்தால் தூக்கினீர்
    உம் அன்பையே நினைக்கிறேன்
    அதை எண்ணியே வாழ்கிறேன் - உம்மைப்போல

    2) உம் Œõயல் எனக்குத் தந்து
    உலகிற்கே ஒளியாய் வைத்த நண்பனே - என் அன்பு நண்பனே
    உம் வார்த்தை எனக்குத் தந்து
    உம் சித்தம் செய்ய பெலனைத் தாருமே - உம் பெலனைத் தாருமே
    நான் உம்மையே நினைக்கிறேன்
    உம் அன்பிலே வாழ்கிறேன் - நேசரேஉம்


    Nesare um - நேசரே உம் Nesare um - நேசரே உம் Reviewed by Christking on September 08, 2018 Rating: 5
    Powered by Blogger.