Aaruyire En Yesayya - ஆரூயிரே என் இயேசுசய்யா - Christking - Lyrics

    Aaruyire En Yesayya - ஆரூயிரே என் இயேசுசய்யா

    Sung by: Srinisha
    Music & Tune: M.A.Jaikumar
    Lyric: Dr.Suresh Frederick
    Album: Aaruyire En Yesayya

    ஆரூயிரே என் இயேசுசய்யா மாறா என் வழியே
    ஆனந்தமே என இயேசய்யா மாறா என் ஒளியே
    மனம் எல்லாமே நீர் தானே
    உணர்வெல்லாமே நீர் தானே - (2)

    1) எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்
    மாறாத நல்ல நீரூற்றே
    ஓடும் வெள்ளம் போல அன்பாலே
    எந்தன் சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்
    வாழும் நாளெல்லாம் தாரும் நன்மையாய்
    தேடும் தெய்வம் நீரே இயேசய்யா - ஆரூயிரே

    2) புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்
    நீங்காத அன்பு தீபமே - (2)
    தங்க வைரம் போல நான் மின்ன
    வந்த விந்தை ராஜா என்னில் நீர் வாரும்
    வாழும் நாளெல்லாம் தாரும் நன்மையாய்
    தேடும் தெய்வம் நீரே இயேசய்யா - ஆரூயிரே


    Aaruyire En Yesayya - ஆரூயிரே என் இயேசுசய்யா Aaruyire En Yesayya - ஆரூயிரே என் இயேசுசய்யா Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.