Akkini Abishegam Tharumae - அக்கினி அபிஷேகம் தாருமே Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Akkini Abishegam Tharumae - அக்கினி அபிஷேகம் தாருமே Song From Album : Belan Vol 5

    Song: Akkini Abishegam Tharumae
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    அக்கினி அபிஷேகம் தாருமே
    உந்தன் ஆவியை ஊற்றுமே - (2)
    உம்மைப் போல மாற்றுமே
    உந்தன் நாமம் சூட்டுமே - (2)

    அல்லேலூயா அல்லேலூயா
    வல்லமை தேவன் அல்லேலூயா
    மகத்துவ ராஜன் அல்லேலூயா
    இப்போ வாரும் இறங்கி வாரும்

    1) மோசேயாக என்னை அழையும்
    யோசுவாவாக என்னை மாற்றும்
    காலேபாக எழும்பச் செய்யும்
    இஸ்ரவேலாய் வழிநடத்துமே
    என்னை இன்று நடத்துமே
    உந்தன் ஆவியால் நிரப்புமே - (2) - அக்கினி

    2) அற்புதம் செய்ய பழக்குவித்தீரே
    உந்தன் தாசன் மோசேயினையே
    யுத்தம் செய்ய பழக்குவித்தீரே
    உந்தன் தாசன் தாவீதினையே
    என்னை இன்று பழக்குமே
    உந்தன் ஆவியால் நிரப்புமே - (2) - அக்கினி

    3) செத்த மனுஷனை எழும்பச் செய்த
    எலிசா எலும்பினுள் உம் அபிஷேகம்
    பவுலின் உருமால் கச்சைதனிலே
    சொஸ்தமாக்கும் உம் அபிஷேகம்
    என்னையும் நீர் நிரப்புமே
    உந்தன் ஆவியால் நடத்துமே - (2) - அக்கினி


    Akkini Abishegam Tharumae - அக்கினி அபிஷேகம் தாருமே Song From Album : Belan Vol 5 Akkini Abishegam Tharumae - அக்கினி அபிஷேகம் தாருமே Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.