Oru Podhum - ஒருபோதும் மறவாத - Christking - Lyrics

    Oru Podhum - ஒருபோதும் மறவாத

    Lyrics and Tune: TRADITIONAL
    sung by: Sis:Joanna John Prem
    Album: UNMAI ANBU
    Music: Joel Thomas Raj

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
    உனக்கென்னகுறை மகனே - (2)

    1) சிறுவந்தொட்டுனையொரு
    செல்லப்பிள்ளைபோற் காத்த - (2)
    உரிமை தந்தையென்றென்றும்
    உயிரோடிருப்பாருன்னை - (2) - ஒருபோதும்

    2) கப்பலினடித் தட்டில்
    களைப்புடன் தூங்குவார்
    கதறுமுன் சத்தங்கேட்டால்
    கடல்புசலமர்த்துவார் - (2) - ஒருபோதும்
    எப்பெரிய போரிலும்
    ஏற்ற ஆயுதமீவார்
    ஏழைப்பிள்ளை உனக்கு
    ஏற்ற தந்தை நானென்பார் - (2) - ஒருபோதும்

    4) கடல்தனக்கதிகாரி
    கர்த்தரென்றறிவாயே
    கடவாதிருக்க வெல்லை
    கற்பித்தாரவர் சேயே - (2) - ஒருபோதும்
    விடுவாளோ பிள்ளையை தாய்
    மேதினியிற்றனியே
    மெய்ப் பரனை நீ தினம்
    விசுவாசித்திருப்பாயே - (2) - ஒருபோதும்

    6) உன்னாசை விசுவாசம்
    ஜெபமும் வீணாகுமா
    உறக்கமில்லாதவர் கண்
    உன்னை விட்டொழியுமா - (2) - ஒருபோதும்

    7) இந்நில மீதினுலக்
    என்ன வந்தாலும் சும்மா
    இருக்குமோ அவர் மனம்
    உருக்கமில்லாதே போமா? - (2) - ஒருபோதும்


    Oru Podhum - ஒருபோதும் மறவாத Oru Podhum - ஒருபோதும் மறவாத Reviewed by Christking on October 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.