Meetparea Ummai Kandu - மீட்பரே உம்மைக் கண்டு

    Meetparea Ummai Kandu - மீட்பரே உம்மைக் கண்டு

    Song: Meetparea Ummai Kandu
    Sung By: Sis. Sanjana
    Music By: Issacraj
    Lyrics: Selvadurai

    மீட்பரே உம்மைக் கண்டு
    மீட்டிடும் கானம் ஒன்று - 2
    தவிக்குது துடிக்குது என் மனம் ஏங்குது - 2
    இந்த நாள் இனிய நாள்
    உம் அன்பை கண்டிட்ட பெருநாள் - மீட்பரே

    1) வெறுமையாய் இருந்திட்ட உலகில்
    எனக்காக யாவையும் படைத்தீர்
    என்னை அதின் நடுவில் நிறுத்தி
    அனைத்தையுமே ஆண்டிட செய்தீர் - (2)
    உம் அன்பு கண்டு நான் நின்று
    நன்றி என்று நானும் கூறிடுமுன்னே
    பாவத்திலே விழுந்தேன் எழ முயன்றேன்
    தினம் அழுதேன் உம்மைக் கண்டிடு முன்னே
    என்னைத் தூக்கினீர் தினம் தாங்கினீர்
    எனை சுமந்தீர் தப்புவித்தீர் நீர் என் இயேசுவே - (2) - மீட்பரே

    2) நீர் என்னை இரட்சித்த தேவன்
    நீர் என்னை காத்திட்ட தேவன்
    தனிமையின் பாதையில் என்னை
    தாயைப் போல் நேசித்த தேவன் - (2)
    உமக்காக வாழ்வேன் உம்மைத் துதிப்பேன்
    தினமும் ஜெபித்து துதிகளை ஏறெடுப்பேன்
    வாழ்நாளில் நானும் கண்ட பொருளில்
    உம்மைப் போல உயர்ந்தது ஒன்றுமில்லை
    பரலோகிலே உம் அருகிலே
    நின்று உம்மை என்றும் துதித்திடுவேனே - (2) - மீட்பரே


    Meetparea Ummai Kandu - மீட்பரே உம்மைக் கண்டு Meetparea Ummai Kandu - மீட்பரே உம்மைக் கண்டு Reviewed by Christking on October 24, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.