Vathai Unthan Koodarathai - வாதை என் கூடாரத்தை - Christking - Lyrics

    Vathai Unthan Koodarathai - வாதை என் கூடாரத்தை

    Sung by: Ps.Raja
    Music: Immanuel Jacob
    Lyrics, Tune: Ps.Raja
    Video: Divine Media

    வாதை என் கூடாரத்தை அணுகாது என்றீரே
    பெலவீன நேரம் எனக்கு உதவி செய்தீரே - (2)

    இயேசுவே இயேசுவே - என்
    கன்மலையாய் இருப்பவரே - (2)

    1) வியாதியிலே இருந்த எனக்கு விடுதலை தந்தீரே
    வறுமையிலே கிடந்த என்னை உயர்த்தி வைத்தீரே
    உம்மை நான் என்றும் மறவேனே
    உமக்காகவே என்றும் வாழ்வேனே - (2)

    2) உம்மை விட்டு தூரம் போன ஆடு நான் தானே
    என்னை தேடி கண்டுபிடித்த மேய்ப்பன் நீர் தானே
    நல்ல மேய்ப்பனே நல்ல தெய்வமே
    உம் அன்பையே அறிந்து கொண்டேனே - (2)

    3) கண்ணீரை துடைப்பதற்கு யாரும் இல்லையே
    அன்பாக பேசுவதற்கு உறவுகள் இல்லையே - என் (2)
    என் சொந்தம் நீர் தானே என் தகப்பன் நீர் தானே
    என் ஜீவன் நீர் தானே, என் எல்லாம் நீர் தானே - (2)


    Vathai Unthan Koodarathai - வாதை என் கூடாரத்தை Vathai Unthan Koodarathai - வாதை என் கூடாரத்தை Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.