Ennai Undakkiya - என்னை உண்டாக்கிய :- Kingsley Vincent - Christking - Lyrics

Ennai Undakkiya - என்னை உண்டாக்கிய :- Kingsley Vincent


என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)

1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே --- என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே --- என்னை

3. ஆவியான தேவன் இவர்
ஆவியில் தொழுகுவோம்
ஆவியோடும் உண்மையோடும்
பணிந்து தொழுகுவோம்
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் --- என்னை


Ennai Undakkiya - என்னை உண்டாக்கிய :- Kingsley Vincent Ennai Undakkiya - என்னை உண்டாக்கிய :- Kingsley Vincent Reviewed by Christking on April 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.