En Belaveenam Neer - என் பெலவீனம் நீர் :- Jollee Abraham - Christking - Lyrics

    En Belaveenam Neer - என் பெலவீனம் நீர் :- Jollee Abraham



    பல்லவி

    என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
    என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2
    நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
    மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் - 2

    சரணம் 1

    நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
    என்னை வெறுத்து தள்ளினபோதும் - 2
    நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை - உம்
    அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் - 2

    சரணம் 2

    சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
    உம் வேத வசனத்தால் தேற்றினீரே - 2
    மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
    மெழுகை போல உருக செய்தீர் - 2

    சரணம் 3

    உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற
    உயிருள்ள தேவன் நீர் அல்லவோ - 2
    நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
    நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் - 2


    English


    En Belaveenam Neer - என் பெலவீனம் நீர் :- Jollee Abraham En Belaveenam Neer - என் பெலவீனம் நீர் :- Jollee Abraham Reviewed by Christking on December 17, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.