நானோ ஜெபித்தேன்! | But I Have Prayed! - Christking - Lyrics

நானோ ஜெபித்தேன்! | But I Have Prayed!



"நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்" (லூக். 22:32).

பல பிரச்சனைகள் உங்களை சூழும்போதும், சத்துருவின் போராட்டங்கள் நெருக்கும்போதும், யாராவது உங்களுக்காக ஜெபிக்கமாட்டார்களா என்று எண்ணி ஏங்குகிறீர்கள். கடமைக்காக ஜெபிப்பவர்களுண்டு. காசுக்காக ஜெபிக்கிறவர்களுமுண்டு. ஆனால் உண்மையாய் உங்களுக்காக பாரமெடுத்து, ஊக்கமாக ஜெபிக்க யாராவது உண்டா என்று உங்கள் உள்ளம் ஏங்குகிறது.

சாத்தான் பேதுருவை சோதனைக்குள்ளாக்கி சுளகினால் புடைக்கிறதுபோல புடைக்க கர்த்தரிடம் உத்தரவு கேட்டபோது, இயேசுகிறிஸ்து பேதுருவுக்காக ஜெபித்துக்கொண்டார். பேதுருவின் விசுவாசத்தை காக்கும்படி வேண்டிக்கொண்டார். அதனால் பேதுரு காக்கப்பட்டார். விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்கிற கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். பிதாவின் வலதுபாரிசத்திலே உங்களுக்காக அவர் மன்றாடிக் கொண்டேயிருக்கிறார். வேதம் சொல்லுகிறது: "கிறிஸ்துவே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருகிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே" (ரோமர் 8:34). கிறிஸ்து உங்களுக்காக ஜெபிக்கிறது மாத்திரமல்ல, ஆவியானவரும் உங்களுக்காக மன்றாடிக் கொண்டேயிருக்கிறார். ஆவியானவர் சகல ரகசியங்களையும் அறிந்தவரானபடியினாலும் உங்களுக்கு இன்ன நேரிடப்போகிறது என்பதை அவர் முன்னாலேயே தெரிந்து வைத்திருக்கிறபடியினாலும் உங்களுக்காக அவர் ஜெபிக்க ஆரம்பித்து விடுகிறார்.

"ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்" (ரோமர் 8:26) என்று வேதம் சொல்லுகிறது. ஆம், ஆவியானவரும் உங்களுடைய பெலவீனங்களில் உங்களுக்கு உதவி செய்கிறார்.

ஆவியானவர் மட்டுமல்ல, நீங்கள் பெற்ற அபிஷேகத்தின் மூலமாக நீங்களும் பிதாவினிடத்தில் வரப்போகிற பிரச்சனைகளுக்காக ஜெபிக்கும்படி உள் உணர்வுகளை தருகிறார். அந்நிய பாஷையிலே பேசி ஜெபிக்கும்போது அந்த பாஷையிலே ஆவியானவர் இணைந்துகொண்டு உங்களை எதிர்நோக்கியிருக்கிற உங்களுக்குத் தெரியாத பிரச்சனைகளுக்காகவும் மன்றாடும்படி அவர் உதவி செய்கிறார்.

மட்டுமல்ல, உங்களுக்காக ஜெபிக்கும்படி ஆங்காங்கே ஜெபவீரர்களுடைய உள்ளத்தில் ஒரு பாரத்தையும், தாகத்தையும் கொடுத்து ஜெபிக்கும்படி செய்கிறார். அதைப் போலவே கர்த்தருடைய ஆவியானவர் பரிசுத்தவான்களுக்கும், ஊழியர்களுக்கும், சுவிசேஷகர்களுக்கும் ஜெபிக்கும் பாரத்தை கொடுத்து ஜெபிக்கும்படி ஏவி எழுப்புகிறார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கிற கர்த்தருடைய பிள்ளைகளோடும், விசுவாசிகளோடும், ஊழியர்களோடும் எப்பொழுதும் ஐக்கியமாயிருங்கள்.

நினைவிற்கு:- "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்" (யாக். 5:14).


“But I have prayed for you, that your faith should not fail” (Luke 22:32).

When several problems surround you and when the enemy pressurises on you with his struggles, you long for someone to pray for you. Some pray for you as a matter of duty. Some others pray for the sake of money. But your heart eagerly searches for someone to pray earnestly for you with a true burden on you.

Jesus Christ prayed for Peter when satan sought His permission to sift him like wheat. But Jesus Christ prayed for protecting the faith of Peter. So, Peter was protected and he stood firmly in his faith.

Dear children of God, Jesus Christ who advocates and prays for you, lives even today. He keeps on pleading for you from the right hand of God. The Scripture says, “It is Christ who ...is even at the right hand of God, who also makes intercession for us” (Romans 8:34). In addition to Christ who prays for you, the Holy Spirit is also pleading for you continually. As the Holy Spirit knows all the secrets and as He knows in advance what is going to happen to you, He starts praying for you.

The Scripture says, “...but the Spirit Himself makes intercession for us with groaning which cannot be uttered” (Romans 8:26). Yes. The Holy Spirit helps you in your weaknesses.

Apart from praying, the Holy Spirit also induces you to pray to God for the problems of the future. When you pray in tongues, He joins you in prayer and helps you to pray for the problems awaiting in the future which are unknown to you.

Further, He creates thirst and burden in the hearts of the prayer warriors and makes them pray for you. Similarly, the Spirit of God raises the saints, servants and the evangelists to pray for you with a burden.

Dear children of God, be in good fellowship with the children of God, believers and servants of God who pray for you with a burden.

To meditate: “Is anyone among you sick? Let him call for the elders of the church and let them pray over him, anointing him with oil in the name of the Lord” (James 5:14).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நானோ ஜெபித்தேன்! | But I Have Prayed! நானோ ஜெபித்தேன்! | But I Have Prayed! Reviewed by Christking on April 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.