நல்ல சமாரியன்! | Good Samaritan! - Christking - Lyrics

நல்ல சமாரியன்! | Good Samaritan!"இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்" (லூக்கா 10:35).

நல்ல சமாரியனின் அன்பும், ஈவும் உள்ளத்தை பிரமிக்க வைக்கின்றன. ஒரு மனிதன், தன் இடுப்பில் கட்டியிருக்கிற துணி அவிழ்ந்துவிழுமென்றால், அவன் தன்னுடைய கையினால் தன் மானத்தை மறைக்க எவ்வளவு துரிதமாக இயங்கி அந்த துணியை மறுபடியும் சரிப்படுத்துவானோ, அவ்வளவு துரிதமாக நல்ல சமாரியன் காயப்பட்ட மனுஷனுக்கு உதவி செய்கிறதைக் காணலாம்.

இந்த அவசரமான உலகத்திலே யாரும் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதில்லை. அன்பான ஒரு வார்த்தை பேசுகிறவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது. அன்பு செலுத்தி தேற்றுபவர்கள், நேரத்தையும், பணத்தையும் இதற்காக தாராளமாக் கொடுப்பவர்கள் ஒரு சிலரே.

காந்திஜி ஒருமுறை ஒரு ஹோட்டலில் போய் உணவு அருந்தினார். அவர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சர்வரிடம் "உன்னுடைய அன்பான சேவைக்கு நன்றி" என்று சிரித்த முகத்தோடு கூறினார்.

அவன் அவரைப் பார்த்து, "ஐயா, நான் உங்களை ஒருக்காலும் மறக்கவே மாட்டேன். என்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால பணியில் இப்படிப்பட்ட அன்புள்ள வார்த்தைகளை நான் கேட்டதேயில்லை" என்றான். காந்திஜி பேசிய ஒருசில வார்ததைகள் அவனுடைய உள்ளத்தை மகிழ்வித்தன.

நல்ல சமாரியனைப் பாருங்கள்! வேதம் சொல்லுகிறது: "சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு (காயப்பட்டவனை) மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்" (லூக்கா 10:33-35).

நல்ல சமாரியனைக் குறித்து வாசிக்கும்போதெல்லாம் நம்முடைய அருமை ஆண்டவரை நினைக்காமல் இருக்கவே முடியாது. நீங்கள் பாவ சேற்றுக்குள் அமிழ்ந்து, உள்ளத்தில் காயங்களோடு தவித்தபோது, கிறிஸ்து மனதுருக்கமாய் உங்களைத் தேடி வந்தாரே. தம்முடைய கல்வாரியின் இரத்தத்தினால் கழுவினாரே. உங்களை சொந்த பிள்ளையாக அரவணைத்தாரே. மாத்திரமல்ல, பரலோக பாக்கியத்துக்கு பங்குள்ளவர்களாய் மாற்றினாரே.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுவீர்களா? ஜனங்கள் மன ஆறுதலில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுடைய உள்ளத்தின் காயங்கள் ஆறும்படி அவர்களுக்காக தேவ சமுகத்திலே ஜெபிப்பீர்களா?

நினைவிற்கு:- "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (ஏசாயா 61:1).


“On the next day, when he departed, he took out two denarii, gave them to the innkeeper and said to him, ‘Take care of him; and whatever more you spend, when I come again, I will repay you” (Luke 10:35).

Look at the Good Samaritan. The Scripture says, “...a certain Samaritan, as he journeyed, came where he was. And when he saw him, he had compassion. On the next day, when he departed, he took out two denarii, gave them to the innkeeper and said to him, ‘Take care of him; and whatever more you spend, when I come again, I will repay you” (Luke 10:33, 35).

The love and generosity of the Good Samaritan astonish our heart. If a garment of a man slips from his hip, it is natural that his hand will move in a flash to hold it back. Here the Good Samaritan exhibits such a speed in helping the wounded person.

Every time we read about the Good Samaritan it is impossible for one not to think of our great God. When you were immersed in the miry clay of sin and struggling with the wounds, did He not come in search of you with compassion? Did He not wash you with His blood of Calvary? Did He not embrace you as His own son? Not only that. Did He not turn you a share-holder for the heavenly blessings?

The present world is a speedy one wherein things are done fast and under these circumstances, no one is willing to help others. It is rare to see a person speaking a word of love. Persons who console others with love and who spare their money and time liberally for this purpose are very few in number.

Once Gandhi visited a hotel and after paying for the food consumed, he told the waiter with a smiling face, "Thank you very much for your loving service." The waiter replied Gandhi, "Sir, I will never forget you. In my twenty-five years of service, I am yet to hear such loving words." The few words of love spoken by Gandhi made his heart to rejoice.

Dear children of God, will you follow the footsteps of Jesus Christ? People are struggling for want of mental comfort. Will you spare your love and time for them?

To meditate: “The Spirit of the Lord God is upon me, because the Lord has anointed me to preach good tidings to the poor” (Isaiah 61:1).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நல்ல சமாரியன்! | Good Samaritan! நல்ல சமாரியன்! | Good Samaritan! Reviewed by Christking on April 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.