நல்ல விதைகள்! | Good Seeds! - Christking - Lyrics

நல்ல விதைகள்! | Good Seeds!



"சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கி வளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாக பலன் தந்தது" (மாற்கு 4:8).

சில நிலங்கள் நல்ல பலனைத் தருகின்றன. சில நிலங்களோ பாறைகளாயிருந்து, விதைகளை தீத்து போடச் செய்கின்றன. சில நிலங்களிலுள்ள செடி, கொடிகள் அருமையான பயிரை நெருக்கிப் போடுகின்றன.

 ஒரு சகோதரன் ஒரு நாள் தன் அறையிலிருந்த ஆவிக்குரிய புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அதிலுள்ள செய்திகள் அவருக்குப் பிடிக்காததினால் அதை சிறிது நேரத்திலேயே கீழே வைத்துவிட்டார். சில நாட்கள் கழித்து ஜெபித்து ஆவியில் அனலானார். அதன் பின்பு அதே புத்தகத்தை எடுத்து வாசித்தார். அப்பொழுது அது அவருக்கு மிகவும் இனிமையானதாக இருந்தது. ஆம், பசியாயிருந்தால்தான் உணவு சுவையாயிருக்கும். நிலம், ஏர் உழப்பட்டு ஆயத்தமாயிருந்தால்தான் அதில் விதைக்கப்படும் விதைகள் முளைத்தெழும்பி, நூறு மடங்கு பலன் கொடுக்கும்.

தேவபிள்ளைகளே, உங்கள் உள்ளம் கர்த்தர்மேல் ஏக்கமும், தாகமுமுள்ளதாயிருந்தால் உங்கள் ஜெப வேளையில் கர்த்தருடைய இனிய பிரசன்னம் உங்களை சூழ்ந்துகொள்ள அது ஏதுவாயிருக்கும். தாவீது சொல்லுகிறார், "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது" (சங். 42:1). ஆகவேதான் கர்த்தருடைய சமுகம் அவருக்கு ஆனந்தமும், அவருடைய சந்நிதானம் அவருக்கு பரிபூரண பேரின்பமுமாய் இருந்தது (சங். 16:11).

சிலர் ஆலயத்துக்கு வரும்போது உற்சாகமாயிராமல் தூங்கி வழிகிறார்கள். பிரசங்கங்கள்கூட அவர்களை ஈர்க்க முடிவதில்லை. ஆனால் சிலரோ, ஆராதனைகளின்போது பற்றி எரியும் அக்கினியாய் இருந்து, ஆவியில் பரவசமடைந்து களிகூருகிறார்கள்.

காரணம் என்ன? கர்த்தருடைய ஆலயத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் ஜெபத்தோடுகூட "ஆண்டவரே, என்னோடு பேசும். உம்முடைய ஞானமான ஆலோசனைகளை எனக்குத் தாரும். பேசுகிற தாசனை உம்முடைய ஆவியினால் நிரப்பி பரலோக மன்னாவினால் போஷியும்" என்று ஜெபித்து எதிர்பார்ப்போடுகூட வருகிறார்கள். ஆகவேதான் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

விதைக்கிறவன் பற்றிய உவமையைப் பாருங்கள். விதைகள் நல்ல விதைகள்தான். விதைக்குள் ஜீவன் இருப்பதும் உண்மைதான். ஆனால் சில விதைகள் கற்பாறையிலும், சில விதைகள் முட்கள் மத்தியிலும் விழுந்தபடியினால் அவற்றால் வளரும் பயிராக மாற முடியவில்லை! பக்குவப்படுத்தப்பட்ட நல்ல நிலத்தில் விழுந்தவைகளோ முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தந்தன.

 சோம்பேறியின் வயல் முள்ளுக்காடாகவே இருக்கும் (நீதி. 24:30,31) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் ஈசாக்கின் நிலமோ நூறு மடங்கு பலனைத் தந்தது (ஆதி. 26:12). தேவபிள்ளைகளே, வசனமானது ஆவியாயும் ஜீவனுமாயுமிருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய உள்ளம் நல்ல நிலமாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

நினைவிற்கு:- "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனுமாயும் இருக்கிறது. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்" (யோவா. 6:63,64).


“But other seed fell on good ground and yielded a crop that sprang up, increased and produced: some thirtyfold, some sixty and some a hundred” (Mark 4:8).

Some lands provide a good yield. But some lands remain as rocks and thus char the seeds. The unwanted plants in some lands choke the precious crops.

One day, a brother picked a spiritual book from his room and began to read. Since the content of the book was not to his liking he stopped reading it within a short time. After some days, his earnest prayer made him a spiritual fire. After this transformation, he took the same book and began to read. The content was very much to his liking. Yes. The food will be tasty only when one is in hunger. Only when the land is ploughed and kept prepared for plantation, the sowed seeds will give out the sprouts and yield one hundred times of benefits. 

   Dear children of God, if the heart remains with longing and thirst over God, it will pave the way for the sweet presence of God to surround you during the time of your prayer. David says, "As the deer pants for the water brooks, so pants my soul for you, O God" (Psalm 42:1). That is why the presence of God was the fullness of joy and pleasures forevermore for him (Psalm 16:11). 

Some people are not enthusiastic while coming to church and are in a sleepy stage. Even the sermons do not attract them. But at the same time, some people remain as burning fire and they rejoice being excited in spirit. 

What is the reason? Even before coming to church they pray saying, "Lord, speak with me. Give me your wise counsel to me. Fill the speaker with your Spirit and feed him with the heavenly manna" and come to church with expectation. That is why they get blessed. 

Look at the parable of the sower. The seeds are good ones and they indeed had life in them. But when some of them fell on rocks and in between thorns, they were not able to turn into growing crops. But the seeds which fell on the well-prepared land produced thirtyfold, some sixty, and some a hundred.

  The Scripture says that the lazy man's field will be overgrown with thorns (Proverbs 24:30, 31). But the land of Isaac yielded a hundredfold (Genesis 26:12). Dear children of God, the Scripture is life and Spirit. At the same time examine whether your heart resembles a good land. 

  To meditate: “The words that I speak to you are spirit and they are life. But there are some of you who do not believe” (John 6:63, 64).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நல்ல விதைகள்! | Good Seeds! நல்ல விதைகள்! | Good Seeds! Reviewed by Christking on April 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.