நம்பிக்கையுண்டு! | Has a Refuge! - Christking - Lyrics

நம்பிக்கையுண்டு! | Has a Refuge!



"நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்" (நீதி. 14:32).

நீதிமான் நம்பிக்கையோடுகூட கர்த்தரிடத்தில் கடந்து போகிறான். அவனுக்கு ஒரு மகிமையான எதிர்பார்ப்புண்டு. அருமையான வாசஸ்தலங்களுண்டு. கிறிஸ்து அவனுக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற சிங்காசனங்களும், கிரீடங்களுமுண்டு.

நீதிமானுடைய மரணம் கர்த்தருடைய பார்வையில் மகிழ்ச்சியானது, அருமையானது. சூழ உள்ள மக்களுக்கும் ஆசீர்வாதமானது. ஆகவே நீதிமானுடைய மரணத்தில் துக்கப்பட்டு அழுகிறதில்லை. அப். பவுல், "சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும், தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்" (1 தெச. 4:13,14) என்று எழுதுகிறார்.

துன்மார்க்கன் தன் மரணத்தில் நம்பிக்கையில்லாமல் மரிக்கிறான். குற்ற மனசாட்சியுள்ளவர்கள் நிம்மதியில்லாமல் மரிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ மரணத்தின்மேல் ஒரு பெரிய நம்பிக்கையுண்டு. ஆகவே "நீதிமான் மரிப்பதைப்போல நான் மரிப்பேனாக" என்று கர்த்தரிடத்தில் கேட்போமாக.

யோபுவின் மரணத்தில் அவருக்கு ஒரு பெரிய நம்பிக்கையிருந்தது. அவர் சொல்லுகிறார், "இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்" (யோபு 19:26,27).

யோசேப்புக்கு தன் மரணத்தின் மேல் ஒரு நம்பிக்கையிருந்தது. ஆகவேதான் தன்னுடைய எலும்புகள் எகிப்தில் இருக்கக்கூடாது என்றும் கானானிலுள்ள தனது முற்பிதாக்களுடைய கல்லறையிலே அவைகள் அடக்கம் பண்ணப்பட வேண்டுமென்றும் விரும்பினார். காரணம், ஒருநாள் எக்காள சத்தம் தொனிக்கும்போது தன்னுடைய முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைய எலும்புகளோடு தனது எலும்புகளும் உயிர்ப்பிக்கப்பட்டு கர்த்தருக்கு எதிர் கொண்டு போவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே அந்த நம்பிக்கை.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைக் கொண்டுபோய் விதைக்கிறீர்கள். கிறிஸ்துவின் நாளில் உயிரோடு எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு விதைக்கிறீர்கள். வேதம் சொல்லுகிறது, "கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்" (1 கொரி. 15:43,44). ஆம், இதுவே உங்களுடைய நம்பிக்கை.

தேவபிள்ளைகளே, எக்காள சத்தம் தொனிக்கும்போது, "கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமா எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்" (1 தெச. 4:16,17) என்று வேதம் சொல்லுகிறது.

நினைவிற்கு:- "உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்" (ஏசாயா 33:17).


“... but the righteous has a refuge in his death” (Proverbs 14:32).

The righteous crosses over to God with hope. He has a glorious expectation and wonderful dwellings too. He also has the thrones and crowns prepared by God.

The death of the righteous is joyful and precious in the eyes of the Lord. It is also a blessing to the people around. So, no one feels sad and cries in the death of a righteous. Paul the Apostle writes, “But I do not want you to be ignorant, brethren, concerning those who have fallen asleep, lest you sorrow as others who have no hope. For if we believe that Jesus died and rose again, even so God will bring with Him those who sleep in Jesus” (I Thessalonians 4:13, 14).

The wicked die with no hope in his death. Those who are with guilty conscience die with no peace. But you have big hope in your death. So, let us ask God that our death should be as that of a righteous.

Job had a big hope in his death. He says, “And after my skin is destroyed, this I know, that in my flesh I shall see God. Whom I shall see for myself and my eyes shall behold and not another” (Job 19:26, 27).

Joseph had hope in his death. That is why he wanted his bones not to be kept in Egypt but be buried in the tombs of his forefathers in Canaan. The reason is that it will enable his bones to resurrect along with those of his forefathers Abraham, Isaac and Jacob when the trumpet is played and move together to meet the Lord in the air.

You sow those who die in Christ. You do this with the hope that they will rise on the day of Christ. The Scripture says, “It is sown in dishonour, it is raised in glory. It is sown in weakness, it is raised in power. It is sown a natural body, it is raised a spiritual body” (I Corinthians 15:43, 44).

Yes. This is your hope. Dear children of God, the Scripture says, “....and with the trumpet of God. And the dead in Christ will rise first. Then we who are alive and remain shall be caught up together with them in the clouds to meet the Lord in the air. And thus we shall always be with the Lord” (I Thessalonians 4:16, 17).

To meditate: “Your eyes will see the King in His beauty; they will see the land that is very far off” (Isaiah 33:17).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நம்பிக்கையுண்டு! | Has a Refuge!  நம்பிக்கையுண்டு! | Has a Refuge! Reviewed by Christking on April 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.