நான் நிரப்புவேன்! | I Will Fill! - Christking - Lyrics

நான் நிரப்புவேன்! | I Will Fill!



"உன் வாயை விரிவாத்திற, நான் அதை நிரப்புவேன்" (சங். 81:10).

சிறு பிள்ளைகளைப் பார்த்து, "வாயைத் திறந்து ஆ என்று காட்டு" என்று சொல்லி பெற்றோர் வாயிலே சாக்லெட்டை போடுதுண்டு. இனிப்பு வகைகளைத் தருவதுண்டு. வியாதிப்படும்போது டாக்டரிடம் செல்லுகிறீர்கள். டாக்டர், "வாயை ஆ என்று திற, நாக்கை நீட்டு" என்று சொல்லிவிட்டு முடிவிலே வாயை மாத்திரையால் நிரப்பிவிடுகிறார்கள்.

கர்த்தர் வாயை திறக்கும்படி சொல்லுகிறார். நீங்கள் எப்படித் திறக்க வேண்டும்? துதியினால் திறக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் கர்த்தரைத் துதிக்கும்படி வாயைத் திறக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கிருபையையும், நன்மையையும் பெற்றுக்கொள்ளுவீர்கள். வேதம் சொல்லுகிறது, "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது" (சங். 103:5).

ஒருமுறை ஒரு போதகர், "மீன் கடையிலுள்ளவர்கள் வாயைத் திறந்து பேசினால் வருகிற வார்த்தையை கேட்க முடியாது. சந்தை வெளிகளிலுள்ளவர்கள் பேரம் பேசுவதற்காக வாயைத் திறக்கிறார்கள். சிலர் வாயைத் திறந்தாலே பொய்யும் புரட்டும் மடை திறந்த வெள்ளம்போல வெளியே வருகிறது. ஆனால் துதிப்பதற்கு அவர்கள் வாயை திறப்பதில்லை" என்று சொல்லி விட்டு, "இன்றைக்கு உங்கள் முழு பெலத்தோடும் முழு ஆத்துமாவோடும் துதியுங்கள். கர்த்தர் செய்த நன்மைகளையெல்லாம் எண்ணி, கல்வாரி அன்பை எண்ணி வாயைத்திறந்து ஸ்தோத்தரியுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றுக்கொள்வீர்கள்" என்றார். அன்று வாயைத் திறந்து ஸ்தோத்தரித்து துதித்த அநேகம்பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

சங்கீதக்காரன் தன் வாயைத் துதிப்பதற்காகவே திறக்க தீர்மானித்தார். "கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்"(சங். 34:1). என்பதே அவருடைய பொருத்தனை. கர்த்தரைத் துதிக்க நீங்கள் வாயைத் திறந்தால் நாள் முழுவதும் உங்கள் உள்ளத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகளும், கிருபையுள்ள வார்த்தைகளுமே புறப்படும்.

தேவபிள்ளைகளே, "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத். 12:34). இருதயத்தில் ஆவியானவர் இருப்பாரென்றால் உங்கள் உதடுகளில் ஆவியின் கனிகள் காணப்படும். நீங்கள் வாயைத் திறக்கும்போது அன்பு, சந்தோஷம், விசுவாசம், தயவு, நீடியபொறுமை, சாந்தம், நற்குணம், விசுவாசம் எல்லாம் வந்து மற்றவர்களை தேற்றும், ஆற்றும், ஆறுதல்படுத்தும்.

"அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்தார்" என்று வேதம் சொல்லுகிறது. இயேசு வாயைத் திறந்தபோது எத்தனை ஆறுதலான வார்த்தைகள், எத்தனை அருமையான உபதேசம் வெளியே வந்தது! நீங்கள் கர்த்தருடைய வாயாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். "ஒருவனும் எதிர்த்து நிற்கக்கூடாத வாக்கையும் வல்லமையையும் உனக்குத் தருவேன்" என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறாரே. தேவபிள்ளைகளே, உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள். கர்த்தர் அதை நன்மையினால் நிரப்புவார்.

நினைவிற்கு:- "அவர் பேசின ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று" (அப். 6:10).


“....open your mouth wide and I will fill it” (Psalm 81:10).

Parents will ask their small children to open their mouth and put chocolates or sweets into it. Similarly, when you fall sick, you visit the doctor. The doctor asks you to open the mouth and stretch out the tongue and in the end, the doctor fills the mouth with tablets .

God also asks you to open your mouth. How should you open your mouth? It should be opened with praises. You will receive the goodness and grace from God in proportion to how much you open your mouth to praise Him. The Scripture says, “Who satisfies your mouth with good things, so that your youth is renewed like the eagles” (Psalm 103:5).

Once a pastor said, "One cannot hear the words coming out of the mouths of the people in the fish market. People in the market places open their mouth to bargain. When some people open their mouths, lies come out as though the floodgates are opened. But these people do not open their mouths to praise." After saying this he continued to say, "Praise God with all your strength and all your soul. Think of all the good things God has done for you, think of the love of Calvary and praise Him opening your mouth. Then you will receive the gifts of the Holy Spirit." Many people who opened their mouth and praised God that day received the anointment of the Holy Spirit.

The Psalmist decided to open his mouth only to praise God. His vow was, “I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth” (Psalm 34:1). If you open your mouth to praise God, words of wisdom and words of grace alone will depart from your heart for the whole day.

Dear children of God, “For out of the abundance of the heart the mouth speaks” (Mathew 12:34). If the Holy Spirit dwells in your heart, the fruits of the Spirit could be seen in your lips. When you open your mouth, all the fruits of the Spirit - love, joy, peace, forbearance, kindness, goodness, faithfulness, gentleness and self-control will come out of your mouth and console and comfort others.

The Scripture says that God preached opening His mouth. What great words of comfort and what a wonderful preaching came out when Jesus Christ opened His mouth! You have been called to stay as the mouth of God. Has not God promised you to give word and power to you which no man could oppose? Dear children of God, open your mouth widely. God will fill it with goodness.

To meditate: “And they were not able to resist the wisdom and the Spirit by which he spoke” (Acts 6:10).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நான் நிரப்புவேன்! | I Will Fill! நான் நிரப்புவேன்! | I Will Fill! Reviewed by Christking on April 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.