நாவின் அதிகாரத்தில்! | In the Power of the Tongue! - Christking - Lyrics

நாவின் அதிகாரத்தில்! | In the Power of the Tongue!



"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்" (நீதி.18:21).

வாயின் வார்த்தைகளைப் பற்றிய இரகசியங்களை வேதம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. கர்த்தருடைய வார்த்தை உலகத்தை சிருஷ்டித்தது. அவருடைய வார்த்தையில் வல்லமையுண்டு. அவருடைய வார்த்தை ஒருபோதும் வெறுமனே திரும்புவதில்லை.

நீங்கள் பேசும் வார்த்தைகள் வல்லமையுள்ளவைதான். கர்த்தர் உங்களுடைய வார்த்தைகளை கனப்படுத்துகிறார், மேன்மைப்படுத்துகிறார். யோசுவா சூரியனைப் பார்த்து, ‘சூரியனே, நீ கிதியோன் மேலும், சந்திரனே, நீ ஆயலோன் மேலும் தரித்து நில்’ என்று சொன்னபோது அவை அப்படியே தரித்து நின்றன.

கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்தபோது, பேச மொழி கொடுத்தார்; நினைவுகளை வெளிப்படுத்த சொற்களைக் கொடுத்தார். சுயசித்தத்தை, சுயவிருப்பங்களை வார்த்தைகளின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். இந்த திறமையும், கிருபையும் மற்ற ஜீவ ராசிகளுக்கு கிடைக்கவில்லை. தேவதூதர்களுக்குக்கூட கிடைக்கவில்லை.

கர்த்தர் உங்களுக்கு சுயசித்தத்தையும், வார்த்தைகளையும் கொடுத்திருக்கிறார். ஆகவே நீங்கள் நன்மையான, விசுவாசமுள்ள, நம்பிக்கைக்குரிய வார்த்தைகளைப் பேசலாம். வேதம் சொல்லுகிறது: "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத். 12:34). ஆசீர்வாதமான வார்த்தைகள் உங்கள் உள்ளத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் உங்கள் உள்ளத்தின் நினைவுகள், சிந்தனைகள், எண்ணங்களெல்லாம் ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்க வேண்டும்.

இருதயத்தை ஆசீர்வாதத்தினால் நிரப்புவது எப்படி? முதலாவதாக, உங்களுடைய இருதயத்தில் கிறிஸ்து நிரம்பியிருக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது கிறிஸ்து உங்களுக்குள் வந்து வாசம் செய்கிறார். வேதம் வாசிக்கும்போதும், ஆராதனை களிலே கலந்துக் கொள்ளும்போதும் தேவ சமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்பும்.

இரண்டாவதாக, உங்களுடைய உள்ளத்தை கர்த்தருடைய வசனம் எப்பொழுதும் நிரப்பியிருக்கட்டும். தாவீது சொல்கிறார்: "நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்" (சங். 119:11).

மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவரின் நிறைவு உங்களுக்குள் இருக்கட்டும். பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு உங்களுக்குள் ஊற்றப்பட்டிருக்கிறது. உங்கள் உள்ளத்தில் ஆவியானவர் நிரம்பியிருப்பாரென்றால், நீங்கள் என்ன பேசவேண்டுமென்று பயப்பட வேண்டியதில்லை. ஆவியானவரே உங்களுக்குள்ளிலிருந்து பேசுவார். தேவபிள்ளைகளே, உங்கள் இருதயம் கிறிஸ்துவின் பிரசன்னத்தாலும், வேத வசனங்களினாலும், ஆவியானவராலும் நிரம்பியிருக்குமென்றால் உங்கள் வாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமுள்ளதாக இருக்கும்.

நினைவிற்கு:- "உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாக்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்" (சங். 119:103).


“Death and life are in the power of the tongue and those who love it will eat its fruit” (Proverbs 18:21).

The Scripture teaches you the secrets about the words of the mouth. The Word of God created the world. There is power in His Word. His Word will never return to Him void.

The words spoken by you are also powerful indeed. God will honour and exalt your words. When Joshua looked at the sun and the moon and said, "Sun, stand still over Gibeon and Moon, in the Valley of Aijalon," they stood still.

While creating man, God gave him a language to speak. He gave him the words to express his thoughts. You express your self-will and wishes through these words. The other creatures have not received this talent and grace. Even the angels did not receive this.

God has given you the self-will and words and so, you can speak words of goodness, faith and hope. The Scripture says, “For out of the abundance of the heart the mouth speaks” (Mathew 12:34). If words of blessings are to come out of your heart, your memories, thoughts and ideas should be filled with blessings.

How to fill the heart with the blessings? Firstly, your heart should be filled with Christ. When you are born again, Christ comes into you and dwells. When you read the Scripture and when you attend church services, the divine peace will fill your heart.

Secondly, let your heart be always filled with the verses of God. David says, “Your word I have hidden in my heart that I might not sin against you” (Psalm 119:11).

Thirdly, let the fullness of the Holy Spirit be within you. Divine love has been poured into you through the Holy Spirit. If your heart has been filled with the Holy Spirit, you need not fear what to speak. The Holy Spirit Himself will speak for you from within. Dear children of God, if your heart is filled with the presence of Christ, verses of Scripture and the Holy Spirit, every word of your mouth will be blessed.

To meditate: “How sweet are your words to my taste, sweeter than honey to my mouth!” (Psalm 119:103).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நாவின் அதிகாரத்தில்! | In the Power of the Tongue! நாவின் அதிகாரத்தில்! | In the Power of the Tongue! Reviewed by Christking on April 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.