நீதியின் சூரியன்! | Sun of Righteousness! - Christking - Lyrics

நீதியின் சூரியன்! | Sun of Righteousness!



"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஐனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" (ஏசா. 60:2).

உலகம் காரிருளை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஒரு அந்தகாரம் உலகத்தை மூடிக்கொள்ளும் நேரம் வருகிறது. ஆனால் தேவ பிள்ளைகளாகிய நீங்கள் கலங்குவதில்லை. உங்களில் கர்த்தருடைய மகிமை எப்போதும் காணப்படும்.

நம் தேவனுடைய பெயர் "நீதியின் சூரியன்" என்பதாகும். எத்தனை அருமையான பெயர்! அந்தகாரமாகிய காரிருள் வரும்போது, காரணமில்லாமல் பகைவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நீதி நியாயங்கள் புரட்டப்படும்போது, உங்களுக்கு ஆதரவாக நீதியின் சூரியனாகிய கர்த்தர் எழும்புவார்.

கர்த்தர் வாக்குத்தத்தமாக சொல்லுகிறார், "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழே ஆரோக்கியம் இருக்கும்" (மல். 4:2) சூரியன் உதிக்கும் போது இருளுடன் சேர்ந்து, பனியும் விலகுகிறது.

அதுபோலவே, ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில் நீதியின் சூரியனாகிய கர்த்தர் உதிக்கும்போது, பிசாசின் கிரியைகள் விலகுகின்றன; பில்லிசூனியங்கள் மறைகின்றன. வியாதிகளும், சாபங்களும் பறந்தோடிப் போகின்றன. புதிய மகிமையான தெய்வீக ஒளி வீசுகிறது. வேதம் சொல்லுகிறது, "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதிய சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின" (2 கொரி. 5:17).

அந்த நீதியின் சூரியனாகிய கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்தபோது, "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது" என்றான் (லூக். 1:78:79). கிறிஸ்து அருணோதயமாய் உங்களையும், உங்கள் அருமைக் குடும்பத்தினரையும் சந்தித்து பிரகாசிக்கச் செய்வார்.

இயேசு சீஷர்களோடிருந்தபோதிலும், அவர்களோடுகூட இருக்கிறவர் நீதியின் சூரியன் என்பதையும், அவரே உலகத்தை பிரகாசிக்கச் செய்கிறவர் என்பதையும் சீஷர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் கர்த்தர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரையும் கூட்டிக் கொண்டு போய் ஒரு மலையின்மேல் ஏறி, "அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அப்பொழுது அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது; அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று" (மத். 17:2). அப்பொழுதுதான் நீதியின் சூரியனான இயேசுவை தேவக்குமாரனென்று அவர்கள் அறிந்தார்கள்.

அந்த சூரிய பிரகாசத்தில் அவர்களோடுகூட எலியா இருக்கிறதையும், மோசே இருக்கிறதையும் சீஷர்கள் கண்டார்கள். இது எத்தனை ஆச்சரியமான வெளிப்பாடு! தேவபிள்ளைகளே,நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் மறுரூபமாக வேண்டும்.

நினைவிற்கு:- "நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போல கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" (2 கொரி. 3:18).


“For behold, the darkness shall cover the earth and deep darkness the people; but the Lord will arise over you and His glory will be seen upon you” (Isaiah 60:2).

The world is moving towards dense darkness. The time comes when the darkness is going to cover the world. But, you the children of God will not worry. The grace of God will be seen in you always.

The name of our God is “The sun of righteousness.” What a wonderful name? When the darkness arrives, when the enemies surround you without reasons and when the justice is denied God who is the Sun of righteousness will rise in support of you.

God says as a promise, “But to you who fear my name the Sun of Righteousness shall arise with healing in His wings” (Malachi 4:2). When the sun rises, the dew is also cleared along with the darkness.

Similarly, when the Sun of Righteousness rises in a man’s life, the deeds of satan are cleared. The acts of sorcery go away. Sickness and curses fly away. A new glorious divine light flows. The Scripture says, “Therefore, if anyone is in Christ, he is a new creation; old things have passed away; behold, all things have become new” (II Corinthians 5:17).

When Isaiah the prophet talks about the birth of Christ “Through the tender mercy of our God, with which the dayspring from on high has visited us; to give light to those who sit in darkness and the shadow of death, to guide our feet into the way of peace” (Luke 1:78, 79). Jesus Christ will meet you and your family as a dayspring and make you shine.

Though Jesus Christ, was very much with the disciples, they did not realise that one who was with them was the Sun of Righteousness and it was He who makes the world shine. One day God took Peter, Jacob and John to the top of a hill and in their presence transfigures. At that time “His face shone like the sun and His clothes became as white as the light” (Mathew 17:2). Only at that moment, they understood that Jesus who was the Sun of Righteousness is the Son of God.

In that brightness of the sun, the disciples saw Elijah and Moses with Him. What a wonderful revelation it is! Dear children of God, you should transfigure in the brightness of God.

To meditate: “But we all, with unveiled face, beholding as in a mirror the glory of the Lord, are being transformed into the same image from glory to glory, just as by the Spirit of the Lord” (II Corinthians 3:18).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நீதியின் சூரியன்! | Sun of Righteousness! நீதியின் சூரியன்! | Sun of Righteousness! Reviewed by Christking on April 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.