நாம் அவர் பிள்ளைகள்! | We Are His Children! - Christking - Lyrics

நாம் அவர் பிள்ளைகள்! | We Are His Children!



"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (யோவா. 1:12).

நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய குடும்பத்திலுள்ளவர்கள். "அப்பா, பிதாவே" என்று அழைக்கிற புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இது உங்களுக்குக் கிடைத்திருக்கிற பெரிய பாக்கியமல்லவா? உங்களுடைய பெற்றோர் இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகளாகி விடுவதில்லை. நீங்களே தனிப்பட்ட முறையில் அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்வதினால் அவருடைய பிள்ளைகளாகிறீர்கள். உங்களுடைய அப்பா, இயேசுவை ‘அப்பா’ என்று அழைப்பதினால் இயேசு உங்களுக்கு தாத்தாவாகி விடுவதில்லை. உங்களுடைய பிள்ளைகள் அவரை கொள்ளுத் தாத்தா என்று அழைப்பதுமில்லை. கர்த்தருக்குப் பிள்ளைகள்தான் உண்டே தவிர பேரப்பிள்ளைகள் கிடையாது. எத்தனைக் கோடி கோடி மக்கள் அவரை விசுவாசிக்கிறார்களோ அத்தனைபேர்களும் அவருடைய பிள்ளைகள்தான்.

கர்த்தருடைய குடும்பத்திலே நீங்கள் அங்கத்தினராய் இருக்கிறதினால் அவர் உங்களுடைய குடும்பத்தின் மீது மிக அக்கறையுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் முதல் அற்புதத்தை ஒரு குடும்பத்தில்தான் செய்ய சித்தமானார். கானாவூர் கலியாணவீட்டிலே கணவனும், மனைவியும் புது வாழ்க்கை ஆரம்பித்தபோது கர்த்தர் அங்கே வந்தார். குறைவையெல்லாம் நிறைவாக்கி ஆசீர்வதித்தார்.

கர்த்தருடைய குடும்பத்திலிருக்கிற உங்களையும் அவர் ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். நீங்கள் கர்த்தருடைய குடும்பத்தில் இருக்கிறதினால் எப்பொழுது வேண்டுமென்றாலும் கர்த்தரண்டை ஓடிவரலாம். உங்களுடைய பிரச்சனைகளை மனந்திறந்து அவரிடத்தில் சொல்லலாம். இயேசுகிறிஸ்து உங்கள் ஒவ்வொருவருடைய குடும்ப வாழ்க்கையிலும் அக்கறைக் கொண்டவராய், உங்களுடைய எல்லா நெருக்கங்களிலும் அவர் நெருக்கப்பட்டு, உங்களுடைய கண்ணீர் யாவையும் துடைத்து அற்புதத்தை செய்கிறார்.

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பல இடங்களுக்கு செய்தி கொடுக்கப் போகும்போது அங்கே தேவபக்தியுள்ளவர்கள் அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்ளுகிறார்கள். உணவளிக்கிறார்கள். காரணம் என்ன? அந்த கல்வாரியின் இரத்தம் தேவபிள்ளைகளை ஒரே குடும்பமாய் இணைத்திருப்பதுதான். ஊழியர்களை உபசரிக்கும்போது இந்த சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள்" என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்திருந்தாலும், கல்வாரியின் இரத்தம் உங்களை ஒரே குடும்பமாய் இணைத்திருக்கிறது. அந்த குடும்பம் பூமியில் மாத்திரமல்ல, பரலோக ராஜ்யத்திலும் கூட இருக்கிறது. பரலோக தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள் எல்லோரும் உங்களுடைய குடும்பம்தான்.

நினைவிற்கு:- "நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும் ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவததர்களிடத்திற்கும், வந்து சோர்ந்தீர்கள்" (எபி. 12:22-24).


“But as many as received Him, to them He gave the right to become children of God, to those who believe in His name” (John 1:12).

You are the children of God. You are part of His family. Yoy have the Spirit of adoption to call him ‘Abba, Father.’ Is it not a great blessing for you? You do not become the children of God just because your parents have accepted Jesus Christ. If you personally place your faith on Him and accept Him, you will become His children

Your father might have called Jesus ‘Father’ but this will not allow you to call Jesus as the grandfather or your children to call Him great-grandfather. There is no other relationship to God other than children. Those who believe him maybe in millions in number but all are His children only.

Since you have become a member of the family of God, He has great concern over your family. God willed to perform His first miracle in a family only. In the wedding home at Cana, when a husband and wife began a new life, God came there and blessed them making good all the shortfalls. Indeed God likes to bless you too who is part of His family. Since you are in God’s family, at any time you can run to God. You can disclose all your problems openly to Him. Jesus Christ shows utmost care towards your families and takes part in your troubles. Thus He wipes all your tears and performs miracles.

When servants of God visit several places to deliver messages, the Godly people residing there will receive them with all love and show great hospitality. The reason is that the blood of Calvary has united those Godly people as one family. When loving hospitality is shown towards the servants of God, God says, "I say to you, in as much as you did it to one of the least of these my brethren, you did it to me."

Dear children of God, you might have taken birth at different places and brought up at different places but the blood of Calvary has united you as one family. That family is present not only on the earth but also in the Heavenly Kingdom. The angels, Cherubs, seraphim - all belong to your family.

To meditate: “But you have come to Mount Zion and to the city of the living God, the heavenly Jerusalem, to an innumerable company of angels” (Hebrews 12:22).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நாம் அவர் பிள்ளைகள்! | We Are His Children! நாம் அவர் பிள்ளைகள்! | We Are His Children! Reviewed by Christking on April 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.