Thalai Nimira Seidhar - தலை நிமிர செய்தார் | Isaac. D - Christking - Lyrics

    Thalai Nimira Seidhar - தலை நிமிர செய்தார் | Isaac. D



    தலை நிமிர செய்தார்
    என்னை உயர்த்திவிட்டார்
    இனி நான் கலங்குவதில்லையே
    பெலன் அடைய செய்தார்
    என்னை மகிழ செய்தார்
    இனி என்றும் பயமெனக்கில்லையே

    கிருபையால் எல்லாம் அருளினார்
    கிருபையால் என்னை உயர்த்தினார் - 2

    நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர

    சிலுவையில் எந்தன் சிறுமையை
    சிதைத்திட்டார் இராஜனே
    வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
    வெற்றியின் தேவனே
    கைகளில் பாய்ந்த ஆணியால்
    என் கரம் பிடித்தாரே
    இரத்தம் பாய்ந்த தம் காலினால்
    என்னை நடக்க செய்தாரே
    நம் கர்த்தர் நல்லவரே-2

    குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
    அரண்மனை தந்தாரே
    வெட்கத்தை அவர் மாற்றினார்
    நம்பினேன் விடுவித்தார்
    எதிரிகள் முன் உயர்த்தினார்
    என் தலையை நிமிர செய்தார்
    உத்தமம் அவர் வார்த்தைகள்
    செய்கைகள் சத்தியம்

    நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர


    English


    Thalai Nimira Seidhar - தலை நிமிர செய்தார் | Isaac. D Thalai Nimira Seidhar - தலை நிமிர செய்தார் | Isaac. D Reviewed by Christking on May 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.