Balibeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே - Christking - Lyrics

    Balibeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே


    1. Balipeedaththil Ennaip Paranae
    Pataikkiraenae Intha Vaelai
    Atiyaenai Thiruchchiththam Pola
    Aanndu Nadaththidumae

    Pallavi

    Kalvaariyin Anpinaiyae
    Kanndu Virainthoti Vanthaen
    Kaluvum Um Thiru Iraththaththaalae
    Karai Neenga Iruthayaththai

    2. Neeranti Ennaalae Paaril
    Aethum Naan Seythida Iyalaen
    Serppeerae Valuvaathu Ennaik
    Kaaththumakkaay Niruththi — Kalvaariyin

    3. Aaviyodaathmaa Sareeram
    Anparae Umakkentum Eenthaen
    Aalaya Maakkiyae Ippothu
    Aaseervathiththarulum — Kalvaariyin

    4. Suyammennil Saampalaay Maara
    Suththaaviyae Anal Moottum
    Jeyam Pettu Maamisam Maaya
    Thaevaa Arul Seykuveer — Kalvaariyin

    5. Ponnaiyum Porulaiyum Virumpaen
    Mannnnin Vaalvaiyum Veruththaen
    Mannavan Yesuvin Saayal
    Innilaththil Kanndathaal — Kalvaariyin


    1. பலிபீடத்தில் என்னைப் பரனே
    படைக்கிறேனே இந்த வேளை
    அடியேனை திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுமே

    பல்லவி

    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன்
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கரை நீங்க இருதயத்தை

    2. நீரன்றி என்னாலே பாரில்
    ஏதும் நான் செய்திட இயலேன்
    சேர்ப்பீரே வழுவாது என்னைக்
    காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின்

    3. ஆவியோடாத்மா சரீரம்
    அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
    ஆலய மாக்கியே இப்போது
    ஆசீர்வதித்தருளும் — கல்வாரியின்

    4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் மூட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் மாய
    தேவா அருள் செய்குவீர் — கல்வாரியின்

    5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
    மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
    மன்னவன் இயேசுவின் சாயல்
    இந்நிலத்தில் கண்டதால் — கல்வாரியின்

    Balibeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே Balibeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.