Deivalayandanil Servom - தெய்வாலயந்தனில் சேர்வோம் - Christking - Lyrics

    Deivalayandanil Servom - தெய்வாலயந்தனில் சேர்வோம்


    தெய்வாலயந்தனில் சேர்வோம்-திரி
    யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்

    தெய்வநிறையுள்ள யேசு சீர் தெய்வாலயம்-அவர்
    செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின்
    மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்

    கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் -எந்தக்
    காலமும் துதிமுழங்கும் கான வாலயம் பரி
    சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்

    திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அது
    தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமாலயம் தீட்
    டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்

    வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்
    மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்
    ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலயம்


    Dheyvaalayanthanil Servom-thiri
    Yaekarin Thiruththaal Pottiyae Kalikoorvom

    Theyvaniraiyulla Yaesu Seer Theyvaalayam-avar
    Settalar Itiththumae Siranthavaalayam Thamin
    Meyppala Naliththu Nammai Meetkumaalayam

    Karththanaippitiththon Jeeva Katteyvaalayam -enthak
    Kaalamum Thuthimulangum Kaana Vaalayam Pari
    Suththamaayththanaiyae Kaakkum Thunga Vaalayam

    Thivyapakthar Koottamae Singaaravaalayam Athu
    Theyva Aavi Sirpi Vaelai Seyyumaalayam Theet
    Davviyam Pakaivilakkum Anpinaalayam

    Vaanamae Thaevaattukkutti Vaalumaalayam Pakthar
    Makimai Jothimaya Maakumaalayam Meynj
    Njaanapaakkiyangal Peyyum Naatharaalayam

    Deivalayandanil Servom - தெய்வாலயந்தனில் சேர்வோம் Deivalayandanil Servom - தெய்வாலயந்தனில் சேர்வோம் Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.