Devanai Uyarthi Thuthiyungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள் - Christking - Lyrics

    Devanai Uyarthi Thuthiyungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள்


    தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    அவர் நாமத்தைப் போற்றியே
    தேவனை உயர்த்தி துதியுங்கள்
    தேவனின் செயல் அதிசயமென்று
    அதிசயமென்று சொல்லி – நம்

    கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
    திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
    படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
    ஆரவாரம் என்றுமே

    இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
    இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
    இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
    வென்று கீழ்படுத்தினார்

    கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
    உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
    பக்தருக்கென்று பலத்த நகரம்
    பலத்த நகரம் உண்டு

    அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
    தன்னில் நம்மை மன்னாதி
    மன்னனே நம் மகிபனாயிருப்பார்
    மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
    சமாதானம் தங்கிடுமே

    புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
    பனிபோல் கிருபையை
    பக்தரின் மேல் பொழிவார்
    இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
    இன்னல் பெருகிடும்

    சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
    அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
    நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
    கண்ணீரைத் துடைத்திடுவார்


    Dhevanai Uyarththith Thuthiyungal
    Avar Naamaththaip Pottiyae
    Thaevanai Uyarththi Thuthiyungal
    Thaevanin Seyal Athisayamentu
    Athisayamentu Solli – Nam

    Kotiyavarin Seeral Kadumaiyaay Varinum
    Thida Pelanum Aelaikkataikkalamumaanaar
    Padum Palavanthar Aaravaaram Entum
    Aaravaaram Entumae

    Ivarae Nam Thaevan Ivar Nammai Iratchiththaar
    Ivarin Iratchippinaal Kalikoornthiduvom
    Ivar Pakaivarai Ventu Geelppaduththi
    Ventu Geelpaduththinaar

    Karththaraiyae Nampi Saththiyam Kaikkonnda
    Uththama Jaathiyae Utpiravaesiyungal
    Paktharukkentu Palaththa Nakaram
    Palaththa Nakaram Unndu

    Anniyar Aalvathillai Innilam
    Thannil Nammai Mannaathi
    Mannanae Nam Makipanaayiruppaar
    Mannarum Thaeva Samaathaanam Thangum
    Samaathaanam Thangidumae

    Punitharaay Mariththor Pooriththelumpiduvaar
    Panipol Kirupaiyai
    Paktharin Mael Polivaar
    Ini Ulakaththil Innal Perukidum
    Innal Perukidum

    Sirantha Virunthontu Seeyon Malaiyin Meethu
    Aruntha Yaavarkkum Aayaththamaakkuvaar
    Ninthaiyai Neekkik Kannnneeraith Thutaiththuk
    Kannnneeraith Thutaiththiduvaar

    Devanai Uyarthi Thuthiyungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள் Devanai Uyarthi Thuthiyungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.