Vandhanam Vandhanamea - வந்தனம் வந்தனமே! | Vinny Allegro | Aanchal Shrivastava

    Vandhanam Vandhanamea - வந்தனம் வந்தனமே! | Vinny Allegro | Aanchal Shrivastava


    வந்தனம், வந்தனமே!
    தேவ துந்துமி கொண்டிதமே!
    இது வரையில் எமையே வளமாய்க் காத்த
    எம்துரையே, மிகத் தந்தனம்-2

    1. சந்ததம் சசந்ததமே
    எங்கள் தகுநன்றிக் கடையாளமே
    நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து
    சரணஞ் செய்கையில்
    தயைகூர் சுரர்பதியே-2

    2. சருவ வியாபகமும்
    எம்மைச் சார்ந்து தற்காத்ததுவே
    எங்கள் சாமி, பணிவாய் நேமி
    துதிபுகழ் தந்தனமே நிதமே!-2

    3. சருவ வல்லபமதும்
    எமைத் தாங்கினதும் பெரிதே,
    சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
    உன் சருவத்துக்குந் துதியே.-2

    4. உந்தன் சர்வ ஞானமும்
    எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
    ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ
    தரும் புகழ் துதி துதியே-2

    5. மாறாப் பூரணனே,
    எல்லா வருடங்களிலும் எத்தனை
    உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
    வல்லாவிக்குந் துதியே-2



    Vandhanam Vandhanamea - வந்தனம் வந்தனமே! | Vinny Allegro | Aanchal Shrivastava Vandhanam Vandhanamea - வந்தனம் வந்தனமே! | Vinny Allegro | Aanchal Shrivastava Reviewed by Christking on June 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.