Aa Varum Naam Ellarum Koodi - வாரும் நாம் எல்லோரும் கூடி - Christking - Lyrics

    Aa Varum Naam Ellarum Koodi - வாரும் நாம் எல்லோரும் கூடி


    வாரும் நாம் எல்லோரும் கூடி,
    மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
    மாசிலா நம் யேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோம். ஆ!

    சரணங்கள்

    1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
    தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்

    2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
    மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்

    3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
    நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்

    4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்

    5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
    பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்


    Vaarum Naam Ellorum Kooti,
    Makil Konndaaduvom; – Sattum
    Maasilaa Nam Yaesu Naatharai
    Vaalththip Paaduvom. Aa!

    Saranangal

    1. Thaarakam Atta Aelaikal Thalaikka Naayanaar – Inthath
    Thaaranni Yilae Manudava Thaaram Aayinaar — Vaarum

    2. Maa Pathaviyai Ilanthu Variyar Aana Naam – Angae
    Maatchi Ura Vaenntiyae Avar Thaalchchi Aayinaar — Vaarum

    3. Njaalamathil Avarkkinnai Nannpar Yaarular – Paarum
    Nam Uyirai Meetkavae Avar Tham Uyir Vittar — Vaarum

    4. Maa Kotiya Saavathin Valimai Neekkiyae – Intha
    Manndalaththi Nintuyirth Thavar Vinndalanj Sentar — Vaarum

    5. Paavikat Kaayp Paranidam Parinthu Vaenntiyae – Avar
    Patcham Vaith Thurum Tholumparai Ratchaை Seykiraar — Vaarum

    Aa Varum Naam Ellarum Koodi - வாரும் நாம் எல்லோரும் கூடி Aa Varum Naam Ellarum Koodi - வாரும் நாம் எல்லோரும் கூடி Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.