Aananda Naal Ungal - ஆனந்த நாள் உங்கள் - Christking - Lyrics

    Aananda Naal Ungal - ஆனந்த நாள் உங்கள்


    ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்
    இருவர் கூடும் பொன்னான நாள்
    நண்பர்களும் உறவினர்களும்
    வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்)

    ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன்
    மணமகன் மணமகள் சேர்த்தருளும்
    ஒருவர்க்கொருவர் உதவியாக
    வாழ கிருபை செய்யும்

    பூவும் மணமும் போல் வாழ்க
    அன்பும் பண்பும் கொண்டு வாழ்க
    இல்லற வாழ்வு இனிதே அமைய
    இரங்கி கிருபை செய்யும்

    ஞானமும் பெலனும் தந்தருளும்
    பெயரும் புகழும் பெற்று வாழ
    பாரில் இயேசுவின் ஒளியில் திகழ
    பரமன் ஆசீர் தாரும்


    Aanantha Naal Ungal Kalyaana Naal
    Iruvar Koodum Ponnaana Naal
    Nannparkalum Uravinarkalum
    Vaalththu Koorum Nannaal(Innaal)

    Aathaam Aevaal Serththa Thaevan
    Manamakan Manamakal Serththarulum
    Oruvarkkoruvar Uthaviyaaka
    Vaala Kirupai Seyyum

    Poovum Manamum Pol Vaalka
    Anpum Pannpum Konndu Vaalka
    Illara Vaalvu Inithae Amaiya
    Irangi Kirupai Seyyum

    Njaanamum Pelanum Thantharulum
    Peyarum Pukalum Pettu Vaala
    Paaril Yesuvin Oliyil Thikala
    Paraman Aaseer Thaarum

    Aananda Naal Ungal - ஆனந்த நாள் உங்கள்  Aananda Naal Ungal - ஆனந்த நாள் உங்கள் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.