Aathi Thiruvaarthai Divya - ஆதித் திருவார்த்தை திவ்விய - Christking - Lyrics

    Aathi Thiruvaarthai Divya - ஆதித் திருவார்த்தை திவ்விய


    ஆதித் திருவார்த்தை திவ்விய
    அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
    ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
    ஆதிரை யோரையீ டேற்றிட

    அனுபல்லவி

    மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனுக்குமாரன் வேஷமாய்,
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
    மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
    தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
    தீம் , தீம் , தீமையகற்றிட
    சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட — ஆதி

    சரணங்கள்

    1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
    யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
    ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். — ஆதி

    2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
    மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
    மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் — ஆதி

    3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
    அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
    அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் — ஆதி


    Aathith Thiruvaarththai Thivviya
    Arputhap Paalakanaakap Piranthaar;
    Aathan Than Paavaththin Saapaththai Theerththida
    Aathirai Yoraiyee Taettida

    Anupallavi

    Maasatta Jothi Thiriththuvath Thor Vasthu
    Mariyaam Kanniyida Muthiththu
    Makimaiyai Maranthu Thamai Veruththu
    Manukkumaaran Vaeshamaay,
    Unna Thakanjar Mukanjar Vaasakar,
    Minnuchchar Vaasakar , Maeniniram Elum
    Unnatha Kaathalum Porunthavae Sarva
    Nanmaich Soroopanaar, Ranjithanaar,
    Thaam , Thaam , Thannarar Vannarar
    Theem , Theem , Theemaiyakattida
    Sangirtha , Sangirtha , Sangirtha Santho
    Shamena Sopanam Paadavae
    Ingirtha, Ingirtha, Ingirtha Namathu
    Iruthayaththilum Engum Nirainthida — Aathi

    Saranangal

    1. Aathaam Saathi Aevinar ; Aapirakaam Visuvaasaviththu
    Yoothar Simmaasanaththaalukai Seyvor
    Eesaay Vangishanaththaanuthiththaar. — Aathi

    2. Poolokap Paava Vimosanar , Poorana Kirupaiyin Vaasanar,
    Maeloka Iraajaathi Iraajan Simmaasanan
    Maenmai Makimaip Pirathaapan Vanthaar — Aathi

    3. Allaelooyaa! Sangarththanam , Aanantha Geethangal Paadavae
    Allaikal , Thollaikal Ellaam Neengida
    Arputhan Meypparan Tharparanaar — Aathi

    Aathi Thiruvaarthai Divya - ஆதித் திருவார்த்தை திவ்விய Aathi Thiruvaarthai Divya - ஆதித் திருவார்த்தை திவ்விய Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.