Aazhkaai Nirkkum Yaar Ivargal - அழகாய் நிற்கும் யார் இவர்கள் - Christking - Lyrics

    Aazhkaai Nirkkum Yaar Ivargal - அழகாய் நிற்கும் யார் இவர்கள்


    அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்
    சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    1.ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
    ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
    சிறிதானதோ பெரிதானதோ
    பெற்றபணி செய்து முடித்தோர்

    2.காடு மேடு கடந்து சென்று
    கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
    உயர்வினிலும் தாழ்வினிலும்
    ஊக்கமாக ஜெபித்தவர்கள்

    3.தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்று நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தைக் காத்தவர்கள்

    4.எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர்போராட்டம் செய்துமுடித்தோர்

    5.வெள்ளைஅங்கியைதரித்துக்கொண்டு
    வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

    6.இனி இவர்கள் பசி அடையார்
    இனி இவர்கள் தாகமடையார்
    வெயிலாகிலும் அனலாகிலும்
    வேதனையை அளிப்பதில்லை

    7.ஆட்டுக்குட்டிதான் இவர் கண்ணீரை
    அற அகற்றித் துடைத்திடுவார்
    அழைத்துச்செல்வார் இன்பஊற்றுக்கே

    அள்ளிப்பருக இயேசுதாமே


    Alakaay Nirkum Yaar Ivarkal
    Thiralaay Nirkum Yaar Ivarkal
    Senaith Thalaivaraam Yesuvin Pottalaththil
    Alakaay Nirkum Yaar Ivarkal

    1.oru Thaalantho Iranndu Thaalantho
    Ainthu Thaalantho Upayokiththor
    Sirithaanatho Perithaanatho
    Pettapanni Seythu Mutiththor

    2.kaadu Maedu Kadanthu Sentu
    Karththar Anpaip Pakirnthavarkal
    Uyarvinilum Thaalvinilum
    Ookkamaaka Jepiththavarkal

    3.thanimaiyilum Varumaiyilum
    Laasaru Pontu Nintavarkal
    Yaasiththaalum Poshiththaalum
    Visuvaasaththaik Kaaththavarkal

    4.ellaa Jaathiyaar Ellaak Koththiram
    Ellaa Moliyum Paesum Makkalaam
    Siluvaiyin Geel Yesu Iraththaththaal
    Seerporaattam Seythumutiththor

    5.vellaiangiyaithariththukkonndu
    Vellaik Kuruththaam Olai Pitiththu
    Aarpparippaar Singaasanam Munpu
    Aattukkuttikkae Makimaiyentu

    6.ini Ivarkal Pasi Ataiyaar
    Ini Ivarkal Thaakamataiyaar
    Veyilaakilum Analaakilum
    Vaethanaiyai Alippathillai

    7.aattukkuttithaan Ivar Kannnneerai
    Ara Akattith Thutaiththiduvaar
    Alaiththuchchelvaar Inpaoottukkae
    Allipparuka Yesuthaamae

    Aazhkaai Nirkkum Yaar Ivargal - அழகாய் நிற்கும் யார் இவர்கள் Aazhkaai Nirkkum Yaar Ivargal - அழகாய் நிற்கும் யார் இவர்கள் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.