Anaithu Samayathu Meipporul - அனைத்து சமயத்து மெய்ப்பொருள் - Christking - Lyrics

    Anaithu Samayathu Meipporul - அனைத்து சமயத்து மெய்ப்பொருள்


    அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
    வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
    மெய்ப்பொருள் இயேசுவே…

    உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
    அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
    மெய்ப்பொருள் இயேசுவே…

    1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
    பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
    சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
    துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
    நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
    என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
    மெய்ப்பொருள் இயேசுவே…

    2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
    கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
    பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
    மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
    சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
    பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
    மெய்ப்பொருள் இயேசுவே…

    3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
    மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
    கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
    மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
    உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
    புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
    மெய்ப்பொருள் இயேசுவே…


    Anaiththu Samayaththu Meypporul Yesuvae
    Vaethangal Kooridum Karupporul Yesuvae
    Meypporul Yesuvae…

    Unnmai Enpathu Onte Ontakum
    Annmaiyil Sernthittal Athuvum Pulanaakum
    Meypporul Yesuvae…

    1. Nnonpu, Naerchcha Pala Pirayaanam Seythumae
    Paavaththin Koormaiyai Vella Mutiyavillai
    Sothanai Naeraththil Udal Ullam Karaippada
    Thukkam Nirainthida Vaalvellaam Soka Mayam
    Nimmathi Engae? Viduthalai Engae?
    Entidum Vaelaiyil Kalvaari Kannnnil Pada
    Meypporul Yesuvae…

    2. Paavamum Saapamum Thuraththidum Vaelaiyil
    Kalvaari Siluvaiyin Kaatchiyil Moolkida
    Paliyaadaam Yesuvin Iraththaththil en Paavam
    Mannikkappattathu, Nampikkaip Piranthathu
    Sothanai Vaelaiyil Yesuvin Thunnai Kanntaen
    Paraloka Paathaiyil Innaiyatta Inpam Petten
    Meypporul Yesuvae…

    3. Kaalamum Kadanthidum Seelamum Kurainthidum
    Manithanin Vaalvu or Maaperum Maaykaiyae
    Kalvi, Selvam, Pukal, Pathavi Aasaikal Pala
    Maranam Varumpothu Marainthu Otip Pokum
    Un Paavamo Thooymaiyo Unnaith Thuraththidum
    Puthiya Manam Pera Siluvai Varai Vanthu
    Meypporul Yesuvae…

    Anaithu Samayathu Meipporul - அனைத்து சமயத்து மெய்ப்பொருள் Anaithu Samayathu Meipporul - அனைத்து சமயத்து மெய்ப்பொருள் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.