Anupam Deva Um - அனுப்பும் தேவா உம் - Christking - Lyrics

    Anupam Deva Um - அனுப்பும் தேவா உம்


    அனுப்பும் தேவா உம் ஆவியினை
    அடியார் மீதே இவ்வேளையிலே

    பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
    பின்மாரி பெய்திடவே

    சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
    சுத்திகரிக்கும் எம்மை
    குற்றங் குறைகள் கறைகளை
    முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

    பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
    பலத்த காற்றாய் வந்தீர்
    பலவீனர் எம் உள்ளத்திலும்
    தேவ பெலன் பெற்றிடவே

    மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
    பெற்ற உம் ஆவிதனை
    துக்கப்படுத்தாது பாதுகாத்து
    தூய வழியில் நடந்திட

    சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
    சத்தியம் சாற்றிடவே
    புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
    சக்தி ஈவீர் இந்நேரமே

    இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
    இடைவிடா சேவை செய்ய
    இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
    பாரில் எங்கும் ஜீவித்திட


    Anuppum Thaevaa Um Aaviyinai
    Atiyaar Meethae Ivvaelaiyilae

    Parisuththa Aavi Palamaay Irangi
    Pinmaari Peythidavae

    Sutterikkum Thaeva Akkiniyae
    Suththikarikkum Emmai
    Kuttang Kuraikal Karaikalai
    Muttum Neekki Suththam Seyya

    Penthekosthae Naalil Seesharkal Mael
    Palaththa Kaattay Vantheer
    Palaveenar Em Ullaththilum
    Thaeva Pelan Pettidavae

    Meetkappadum Nal Naalukkente
    Petta Um Aavithanai
    Thukkappaduththaathu Paathukaaththu
    Thooya Valiyil Nadanthida

    Saaththaanin Kottakal Thakarnthidavae
    Saththiyam Saattidavae
    Puththiyaay Nintu Yuththam Seyya
    Sakthi Eeveer Innaeramae

    Ilaiththup Pona Ullam Pelanatainthu
    Itaividaa Sevai Seyya
    Iratchakar Yesuvin Saatchiyaaka
    Paaril Engum Jeeviththida

    Anupam Deva Um - அனுப்பும் தேவா உம் Anupam Deva Um - அனுப்பும் தேவா உம் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.