Arul Maari Engumaaka - அருள் மாரி எங்குமாக - Christking - Lyrics

    Arul Maari Engumaaka - அருள் மாரி எங்குமாக


    1. அருள் மாரி எங்குமாக
    பெய்ய, அடியேனையும்
    கர்த்தரே, நீர் நேசமாக
    சந்தித்தாசீர்வதியும்
    என்னையும், என்னையும்
    சந்தித்தாசீர்வதியும்.

    2. என் பிதாவே, பாவியேனை
    கைவிடாமல் நோக்குமேன்
    திக்கில்லா இவ்வேழையேனை
    நீர் அணைத்துக் காருமேன்
    என்னையும், என்னையும்
    நீர் அணைத்துக் காருமேன்.

    3. இயேசுவே, நீர் கைவிடாமல்
    என்னைச் சேர்த்து ரட்சியும்
    ரத்தத்தாலே மாசில்லாமல்
    சுத்தமாக்கியருளும்
    என்னையும், என்னையும்
    சுத்தமாக்கியருளும்.

    4. தூய ஆவீ, கைவிடாமல்
    என்னை ஆட்கொண்டருளும்
    பாதை காட்டிக் கேடில்லாமல்
    என்றும் காத்துத் தேற்றிடும்
    என்னையும், என்னையும்
    என்றும் காத்துத் தேற்றிடும்.

    5. மாறா சுத்த தெய்வ அன்பும்
    மீட்பர் தூய ரத்தமும்
    தெய்வ ஆவி சக்திதானும்
    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்
    என்னிலும், என்னிலும்
    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.


    1. Arul Maari Engumaaka
    Peyya, Atiyaenaiyum
    Karththarae, Neer Naesamaaka
    Santhiththaaseervathiyum
    Ennaiyum, Ennaiyum
    Santhiththaaseervathiyum.

    2. En Pithaavae, Paaviyaenai
    Kaividaamal Nnokkumaen
    Thikkillaa Ivvaelaiyaenai
    Neer Annaiththuk Kaarumaen
    Ennaiyum, Ennaiyum
    Neer Annaiththuk Kaarumaen.

    3. Yesuvae, Neer Kaividaamal
    Ennaich Serththu Ratchiyum
    Raththaththaalae Maasillaamal
    Suththamaakkiyarulum
    Ennaiyum, Ennaiyum
    Suththamaakkiyarulum.

    4. Thooya Aavee, Kaividaamal
    Ennai Aatkonndarulum
    Paathai Kaattik Kaetillaamal
    Entum Kaaththuth Thaettidum
    Ennaiyum, Ennaiyum
    Entum Kaaththuth Thaettidum.

    5. Maaraa Suththa Theyva Anpum
    Meetpar Thooya Raththamum
    Theyva Aavi Sakthithaanum
    Maannpaayth Thontachcheythidum
    Ennilum, Ennilum
    Maannpaayth Thontachcheythidum.

    Arul Maari Engumaaka - அருள் மாரி எங்குமாக Arul Maari Engumaaka - அருள் மாரி எங்குமாக Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.