Arumai Ratchaga Koodi - அருமை ரட்சகா கூடி - Christking - Lyrics

    Arumai Ratchaga Koodi - அருமை ரட்சகா கூடி


    அருமை ரட்சகா கூடி வந்தோம் உம
    தன்பின் விருந்தருந்த வந்தோம்

    அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
    அன்பை நினைக்க

    ஆராயும் எமதுள்ளங்களை -பல
    வாறான நோக்கம் எண்ணங்களைச்
    சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
    திருவருள் கூரும்

    ஜீவ அப்பமும் பானமும் நீர் எங்கள்
    தேவையாவும் திருப்தி செய்வீர்
    கோவே மா பயபக்தியாய் விருந்து
    கொண்டாட இப்போ

    உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்-உமது
    ஒளி முகதரிசன முற்றோம்
    சமாதானம் அன்பு சந்தோஷமும் எமில்
    தங்கச் செய்திடும்

    கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
    கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்
    அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
    குருவே வந்தனம்

    எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் -கொடும்
    ஈனச் சிலுவையில் மரித்தீர்
    பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்
    புண்ய நாதரே

    பந்திக் கெசமான் நீர் யேசுவே எமைச்
    சொந்தமாய் வரவழைத்தீரே
    உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
    கூழியஞ் செய்ய


    Arumai Ratchakaa Kooti Vanthom Uma
    Thanpin Viruntharuntha Vanthom

    Arivuk Kettatha Aachchariyamaana
    Anpai Ninaikka

    Aaraayum Emathullangalai -pala
    Vaaraana Nnokkam Ennnangalaich
    Seeraaych Suththamanathaay Utkolla Neer
    Thiruvarul Koorum

    Jeeva Appamum Paanamum Neer Engal
    Thaevaiyaavum Thirupthi Seyveer
    Kovae Maa Payapakthiyaay Virunthu
    Konndaada Ippo

    Umathanpin Pirasannam Pettam-umathu
    Oli Mukatharisana Muttam
    Samaathaanam Anpu Santhoshamum Emil
    Thangach Seythidum

    Kirupai Virunthin Intha Aikyam-poovil
    Kitaith Tharkariya Perum Paakyam
    Arum Piriyaththo Dengalai Naesikkum
    Kuruvae Vanthanam

    Engatkaay Umai Oppuviththeer -kodum
    Eenach Siluvaiyil Mariththeer
    Pongum Paeranpai Engum Therivippom
    Punnya Naatharae

    Panthik Kesamaan Neer Yaesuvae Emaich
    Sonthamaay Varavalaiththeerae
    Untham Kirupai Vallamai Pettumak
    Kooliyanj Seyya

    Arumai Ratchaga Koodi - அருமை ரட்சகா கூடி Arumai Ratchaga Koodi - அருமை ரட்சகா கூடி Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.