Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர் - Christking - Lyrics

Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர்


எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா
— எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்
— எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர
— எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
— எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
— எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
— எங்கே


Engae Sumanthu Pokireer ? Siluvaiyai Neer
Engae Sumanthu Pokireer ?

1. Engae Sumanthu Poreer ? Inthak Kaanalil Umathu
Angam Sumanthu Nnoka , Aiyaa , en Aesunaathaa
— Engae

2. Tholil Paaram Aluththa , Thookkap Pelam Illaamal ,
Thaalun Thaththalikkavae , Thaapa Sopam Ura , Neer
— Engae

3. Vaathaiyinaal Udalum Vaatith Thavippunndaaka ,
Paetham Illaach Seemonum Pinnaakath Thaangivara
— Engae

4. Thaayaar Aluthuvara Saarnthavar Pin Thodara ,
Maayam Illaatha Njaana Maathar Pulampi Vara
— Engae

5. Valla Paeyaik Kollavum , Marananthanai Vellavum ,
Ellai Illaap Paavangal Ellaam Naasamaakavum
— Engae

6. Maasanukaatha Saththiya Vaasakanae , Umathu
Thaasarkalaik Kaakkavum Thaangaach Sumaiyai Eduththu
— Engae

Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர் Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.