Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி - Christking - Lyrics

    Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி


    எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
    அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

    பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
    பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

    வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
    போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

    பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
    பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

    எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
    எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

    உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
    மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

    தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
    சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

    ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
    ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்


    Engaeyaakinum Svaami Engaeyaakinum
    Angae Yaesuvae Ummai Atiyaen Pinselvaen

    Pangam Paadukal Ulla Pallaththaakkilum
    Payamillaamal Naan Unthan Paatham Pinselvaen

    Vaekum Theeyilum Minjum Vellap Perukkilum
    Pokumpothum Naan Angum Aekuvaen Pinnae

    Paal Vanaththilum Unthan Paathai Sentalum
    Pathaikkaamal Naan Unthan Pakkam Pinselvaen

    Enakku Naesamaay Ulla Ellaavattayum
    Eduththittalumae Ummai Engum Pinselvaen

    Unthan Paathaiyil Mosam Ontum Naeridaa
    Manthaaram Mappum Ummaal Maarippokumae

    Thaevaiyaanathai Ellaam Thirupthiyaayth Thanthu
    Saavu Naal Varai Ennaith Thaangi Naesippeer

    Jeeviththaalum Naan Eppo Seththaalum Aiyaa
    Aavalaakavae Ummai Atiyaen Pinselvaen

    Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி Engeyakinum Swami - எங்கேயாகினும் ஸ்வாமி Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.