Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே - Christking - Lyrics

    Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே


    என்னாலுரைக்க முடியாதே – என்றன்
    இருதய மகிழ்ச்சி இப்போதே

    முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
    மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
    தேற்றினார் அகத்தினை

    காட்டினில் அலைந்த ஆடுநானே – எனைக்
    கண்டு பிடித்தவர் யேசு கோனே
    வீட்டினுள் மகிமையைக் கண்டேனே – இனி
    வியந்து விரைந்து பாடுவேனே
    நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
    ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்

    பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே – பாவப்
    பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
    ஆவல் ஆசையும் அகற்றினாரே – தேவ
    அன்பினை அகத்துள் ஊற்றினாரே
    தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
    ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்

    சத்துருவினால் விளைந்த கோட்டை – எல்லாம்
    தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
    பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் – பெறப்
    பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
    இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
    தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
    அஞ்சிடேனே இனி

    ஆசை மிகும் யேசு பெருமானே – பதி
    னாயிரம் பேரில் சிறந்த கோனே
    வாச லீலிப்பீவே சீவதேனே – வான
    மன்னாவே இலங்கு கதிரோனே
    மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
    நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
    சூடுவாய் தோத்திரம்


    Ennaaluraikka Mutiyaathae – Entan
    Iruthaya Makilchchi Ippothae

    Munnaalae Paavaththuyaril Moolkina Paethaiyai Yaesu
    Mannavanaar Thaetikkanndu Maattanaar Pavaththinai
    Thaettinaar Akaththinai

    Kaattinil Alaintha Aadunaanae – Enaik
    Kanndu Pitiththavar Yaesu Konae
    Veettinul Makimaiyaik Kanntaenae – Ini
    Viyanthu Virainthu Paaduvaenae
    Naattinil Enaiththodar Onaay Puli Yaavum Verunndu
    Ottampitith Thappaalae Nintuttitho Paarththena Vetti Atainthaen

    Paavangal Anaiththum Manniththaarae – Paavap
    Payangal Santhaekan Tholaiththaarae
    Aaval Aasaiyum Akattinaarae – Thaeva
    Anpinai Akaththul Oottinaarae
    Thaeva Vasananjalikkach Sepaththiyaanangal Sirakka
    Aavi Ullilaekalikka Aaduthae Kaalkalum Paaduthae Naavathum

    Saththuruvinaal Vilaintha Kotta – Ellaam
    Thaanntivanthaen Yaesu Perungatta
    Paktharuk Kaayaththam Seytha Veettap – Perap
    Paarththirukkinten Parama Naatta
    Iththarai Vasikkung Kaalam Aththanaiyum Yaesukkenaith
    Thaththam Seythuvittaen Avar Thanjamae Kaavil Thaan
    Anjitaenae Ini

    Aasai Mikum Yaesu Perumaanae – Pathi
    Naayiram Paeril Sirantha Konae
    Vaasa Leelippeevae Seevathaenae – Vaana
    Mannaavae Ilangu Kathironae
    Maasarakkaluvi Enthan Manathul Vasiththeluppum
    Naesaththaal Makilnran Thentum Needuvaay Kirupaikal
    Sooduvaay Thoththiram

    Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.