Galeeliya Kadaloram Oru Manithar - கலிலேயா கடற்கரையோரம்

    Galeeliya Kadaloram Oru Manithar - கலிலேயா கடற்கரையோரம்


    கலிலேயா கடற்கரையோரம்
    ஓர் மனிதர் நடந்து சென்றார்
    அவர்தான் இயேசு இரட்சகர்
    உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

    1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
    தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
    பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
    கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
    உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

    நெஞ்சமே நினைத்திடு அவர்
    அன்பினை ருசித்திடு

    2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
    நானிலம் வெறுத்தாலும்
    பெற்றோர்கள் மறந்தாலும் உன்
    உற்றார்கள் பிரிந்தாலும்
    நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
    நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

    3.ஏன் இந்த வேதனைகள்
    என்று ஏங்கிடும் மனிதர்களே
    என் இயேசுவின் போதனையை
    ஏன் இன்று மறந்தீர்களோ
    வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
    பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே


    Kalilaeyaa Kadarkaraiyoram
    Or Manithar Nadanthu Sentar
    Avarthaan Yesu Iratchakar
    Un Paavaththaip Pokkum Uththamar

    1.kaarirul Soolnthaalum Perungavalaikal
    Thodarnthaalum Kannnneer Vatiththaalum
    Perum Kalakkangal Pitiththaalum
    Karththarin Kural Unnai Alaikkirathu
    Un Kavalaiyai Maattida Thutikkirathu

    Nenjamae Ninaiththidu Avar
    Anpinai Rusiththidu

    2.Nannparkal Pakaiththaalum - Intha
    Naanilam Veruththaalum
    Pettarkal Maranthaalum Un
    Uttarkal Pirinthaalum
    Naayakar Yesu Unnai Arinthiduvaar - Avar
    Namaiyinaal Vali Nadaththiduvaar - Nenjamae

    3.Aen Intha Vaethanaikal
    Entu Aengidum Manitharkalae
    En Yesuvin Pothanaiyai
    Aen Intu Marantheerkalo
    Vaethanai Theerththidum Vaenthanavar - Mana
    Paaraththai Pokkidum Thaevanavar - Nenjamae

    Galeeliya Kadaloram Oru Manithar - கலிலேயா கடற்கரையோரம் Galeeliya Kadaloram Oru Manithar - கலிலேயா கடற்கரையோரம் Reviewed by Christking on August 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.