Iraiva Nee Oru Sangeetham - இறைவா நீ ஒரு சங்கீதம் - Christking - Lyrics

    Iraiva Nee Oru Sangeetham - இறைவா நீ ஒரு சங்கீதம்


    இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்

    இணைந்தே பாடிடும் என் கீதம்

    உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்

    என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

    புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்

    இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2

    பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்

    பாடலால் என்னகம் இணைந்திடுமே

    எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்

    எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா

    காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி

    வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2

    கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ

    தோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2

    நாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை

    நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

    தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்

    தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்

    அருளாளன் நீயின்றி அழகேது என்னில்

    அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2


    Iraivaa Nee Oru Sangatham – Athil

    Innainthae Paadidum en Geetham

    Un Karam Thavalum Thiruyaalisai – Athil

    En Manam Meetdidum Thamil Aelisai

    Pullaangulalena Thaniththirunthaen – Athil

    Isaiyaay en Manam Pukunthiduvaay – 2

    Paaviyen Nenjamum Thuyil Kalaiyum – Puthup

    Paadalaal Ennakam Innainthidumae

    Erikinta Sudaraaka Vinnmeenkal Un Vaanil

    Enai Intu Thiriyaaka Aettayo Iraivaa

    Kaattaki Oottaki Kaarmaeka Malaiyaaki

    Vaalvaaki Valiyaaki Vaaraayo Iraivaa – 2

    Kallilum Mullilum Kaal Nadanthaalum – Nee

    Tholinil Sumanthae Valinadanthaay – 2

    Naathaa Un Vaarththaikal Vaanamutham – 2 Ennai

    Naalellaam Vaalvikkum Thaenamutham

    Thol Meethu Thaalaattum Thaayaakum Theyvam

    Thaal Potti Nintalae Nooraakum Selvam

    Arulaalan Neeyinti Alakaethu Ennil

    Athai Naanum Ataiyaamal Vitivaethu Mannnnil – 2

    Iraiva Nee Oru Sangeetham - இறைவா நீ ஒரு சங்கீதம்  Iraiva Nee Oru Sangeetham - இறைவா நீ ஒரு சங்கீதம் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.