Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி

    Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி


    ஐயையா நான் ஒரு மா பாவி என்னை
    ஆண்டு நடத்துவீர் தேவாவி

    மெய் ஐயா இது தருணம் ஐயா என்றன்
    மீதிலிரங்கச் சமயம் ஐயா
    ஐயையா இப்போ தென்மேல் இரங்கி வெகு
    அவசியம் வரவேணும் தேவாவி

    எனதிருதயம் பாழ்நிலமாம் ஏழை
    என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
    தினமும் வந்து வழிநடத்தும் ஞான
    தீபமே உன்னத தேவாவி

    ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் தினம்
    அருவருத்து நான் தள்ளுதற்கு

    வாகான சுத்த மனம் தருவீர் நீர்
    வல்லவராகிய தேவாவி

    பத்தியின் பாதை விலகாமல் கெட்ட
    பாவத்தில் ஆசைகள் வையாமல்
    சத்திய வேதப்படி நடக்க என்னைத்
    தாங்கி நடத்திடும் தேவாவி

    அன்பு பொறுமை நற் சந்தோஷம் என்
    ஆண்டவரின் மேல் விசுவாசம்
    இன்ப மிகு மெய்ச் சமாதனம் இவை
    யாவும் தருவீரே தேவாவி

    ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து அவர்
    இடத்திலேயே நம்பிக்கை வைக்க
    மாசில்லாத் துய்யனே வந்துதவும் நீர்
    வராமல் தீராதே தேவாவி


    Aiyaiyaa Naan Oru Maa Paavi Ennai
    Aanndu Nadaththuveer Thaevaavi

    Mey Aiyaa Ithu Tharunam Aiyaa Entan
    Meethilirangach Samayam Aiyaa
    Aiyaiyaa Ippo Thenmael Irangi Veku
    Avasiyam Varavaenum Thaevaavi

    Enathiruthayam Paalnilamaam Aelai
    Ennaith Thiruththi Neer Anpaakath
    Thinamum Vanthu Valinadaththum Njaana
    Theepamae Unnatha Thaevaavi

    Aakaatha Lokaththin Vaalvai Ellaam Thinam
    Aruvaruththu Naan Thallutharku

    Vaakaana Suththa Manam Tharuveer Neer
    Vallavaraakiya Thaevaavi

    Paththiyin Paathai Vilakaamal Ketta
    Paavaththil Aasaikal Vaiyaamal
    Saththiya Vaethappati Nadakka Ennaith
    Thaangi Nadaththidum Thaevaavi

    Anpu Porumai Nar Santhosham en
    Aanndavarin Mael Visuvaasam
    Inpa Miku Meych Samaathanam Ivai
    Yaavum Tharuveerae Thaevaavi

    Aesukiristhuvil Naan Saarnthu Avar
    Idaththilaeyae Nampikkai Vaikka
    Maasillaath Thuyyanae Vanthuthavum Neer
    Varaamal Theeraathae Thaevaavi

    Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.