Jeba Velai Emakanantham - ஜெபவேளை எமக்கானந்தம் - Christking - Lyrics

    Jeba Velai Emakanantham - ஜெபவேளை எமக்கானந்தம்


    ஜெபவேளை எமக்கானந்தம்
    என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
    ஜெபம் எங்கள் ஜெயமே

    இருள் சூழ்ந்த வனம் போன்ற
    இருண்ட கெத்செமனேயில்
    இறுதி வேளையில் ஜெபித்தீர் – இரத்த
    வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே
    அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த

    மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
    உம் மகிமையை அளித்தீரையா
    அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
    எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா

    சரீரமோ பெலவீனம்
    ஆவியே உயிர்ப்பிக்கும்
    சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
    அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே
    நல்ல அருள் ஆவி வரம் தாருமே

    ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
    ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
    பக்தன் மோசே போல் ஜெயம் பெற
    ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே

    உயர் கர்மேல் மலை மீது
    ஜெபித்திடும் எலியா போல்
    துயருற்ற மகள் அன்னாள் போல்
    தாசன் தானியேல் எனும் பக்தர் பலர்
    ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே


    Jepavaelai Emakkaanantham
    Entum Jepamillaa Jeyamillai
    Jepam Engal Jeyamae

    Irul Soolntha Vanam Ponta
    Irunnda Kethsemanaeyil
    Iruthi Vaelaiyil Jepiththeer – Iraththa
    Vaervaiyum Perumoochchum Perukidavae
    Antha Iravellaam Jepiththeeraiyaa – Intha

    Maruroopa Malaimeethil Tharisanam Koduththu
    Um Makimaiyai Aliththeeraiyaa
    Antu Pola Um Tharisanam Emakkarulum
    Engal Arumai Aanndavar Iyaesaiyaa

    Sareeramo Pelaveenam
    Aaviyae Uyirppikkum
    Salippinti Jepiththiduvom
    Antha Santhi Maththiyaanaththil Jepiththidavae
    Nalla Arul Aavi Varam Thaarumae

    Oor Aaron Iruvarum Karangalai Sumanthida
    Ookkamaay Jepam Seythaarae
    Pakthan Mose Pol Jeyam Pera
    Jepiththidavae Niththiyaparanae Kirupai Thaarumae

    Uyar Karmael Malai Meethu
    Jepiththidum Eliyaa Pol
    Thuyarutta Makal Annaal Pol
    Thaasan Thaaniyael Enum Pakthar Palar
    Jepiththa Antha Thani Jepa Varam Thaarumae

    Jeba Velai Emakanantham - ஜெபவேளை எமக்கானந்தம் Jeba Velai Emakanantham - ஜெபவேளை எமக்கானந்தம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.