Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும்

    Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும்


    காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
    கருத்துடன் பாடிடுவேன்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
    பாடிடும் தொனி கேட்குதே

    1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
    கிருபையாய் இரட்சிப்புமானார்
    அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
    அனுதினம் வாழ்ந்திடுவேன் — காலையும்

    2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
    என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
    பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
    பாதையில் நடத்திடுவார் — காலையும்

    3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
    என்றும் தம் மகிமையைக் காண
    ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
    வாஞ்சித்து நாடிடுவேன் — காலையும்

    4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
    தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
    உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
    உயர்த்துவார் கன்மலைமேல் — காலையும்

    5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
    என் கர்த்தர் சொன்னதினாலே
    தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
    தயவாகப் பதிலளிப்பார் — காலையும்

    6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
    கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
    எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
    என்றென்றும் காத்திருக்கும் — காலையும்

    7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
    என் கர்த்தர் வாக்கு மாறிடார்
    தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
    தவறாமல் நிறைவேற்றுவார் — காலையும்


    Kaalaiyum Maalaiyum Evvaelaiyum Karththaraik
    Karuththudan Paadiduvaen

    Parisuththar Parisuththar Parisuththar Enaththoothar
    Paadidum Thoni Kaetkuthae

    1. Karththar en Velichcham Jeevanin Pelanum
    Kirupaiyaay Iratchippumaanaar
    Anjidaamal Kalangaamal Payamintith Thikilinti
    Anuthinam Vaalnthiduvaen — Kaalaiyum

    2. Enakkethiraay or Paalaiyamirangi
    Enmael or Yuththam Vanthaalum
    Payappataen; Ethiraali Nimiththamaay Sevvaiyaana
    Paathaiyil Nadaththiduvaar — Kaalaiyum

    3. Ontai Naan Kaettaen , Athaiyae Naaduvaen
    Entum Tham Makimaiyaik Kaana
    Jeevanulla Naalellaam Tham Aalayaththil Thanguvathai
    Vaanjiththu Naadiduvaen — Kaalaiyum

    4. Theengu Naalil Tham Koodaara Maraivil
    Thaetich Serththennai Maraippaar
    Unnathaththil Maraivaaka Oliththennaip Paathukaaththu
    Uyarththuvaar Kanmalaimael — Kaalaiyum

    5. Enthan Mukaththaith Thaedungal Entu
    En Karththar Sonnathinaalae
    Tham Mukaththaith Thaeduvaenae Kooppidum en Saththam Kaettu
    Thayavaakap Pathilalippaar — Kaalaiyum

    6. Thakappanum Thaayum Kaivittalum en
    Karththar Ennaich Serththukkolvaar
    Enthan Ullam Sthiramaakath Thidamaakak Karththarukkae
    Ententum Kaaththirukkum — Kaalaiyum

    7. Enakkaaka Yaavum Seythu Mutippaar
    En Karththar Vaakku Maaridaar
    Thamakkentum Payanthidum Pakthar Yaavar Viruppamum
    Thavaraamal Niraivaettuvaar — Kaalaiyum

    Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும் Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.