Kaalamae Thaevanaith Thaedu - காலையில் தேவனைத் தேடு - Christking - Lyrics

    Kaalamae Thaevanaith Thaedu - காலையில் தேவனைத் தேடு


    காலையில் தேவனைத் தேடு – ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
    சீரான நித்திய ஜீவனை நாடு
    — காலமே

    மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
    மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு
    — காலமே

    பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனுவேலனைப் பணிய
    — காலமே

    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
    — காலமே

    வேலையுனக்குக் கைகூட – சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
    — காலமே


    Kaalaiyil Thaevanaith Thaedu – Jeeva
    Kaarunnyar Paatham Panninthu Mantadu

    Seelamudan Patham Paatik Konndaadu,
    Seeraana Niththiya Jeevanai Naadu
    — Kaalamae

    Mannuyirkkaay Mariththaarae – Manu
    Mainthanena Naamam Vaiththirunthaarae
    Un Siruttikarai Nee Uthayaththilennnu
    Ullanganinthu Thanijepam Pannnu
    — Kaalamae

    Paavach Sothanaikalai Vellu – Ketta
    Paarudal Paeyudan Porukku Nillu
    Jeeva Kireedanj Siraththilanniyach
    Sinthanai Sey Manuvaelanaip Panniya
    — Kaalamae

    Siruvarkal Ennidanj Serath -thatai
    Seyyaa Thirungalentar Manathaara
    Paraloka Selva Mavarkkup Palikkum
    Paakkiyamellaam Paranthu Jolikkum
    — Kaalamae

    Vaelaiyunakkuk Kaikooda – Sathya
    Vaethan Kirupai Varaththai Mantada
    Kaalai Thaeduvor Enaik Kanndataivaarae
    Kannviliththu Jepanj Seyyumentarae
    — Kaalamae

    Kaalamae Thaevanaith Thaedu - காலையில் தேவனைத் தேடு Kaalamae Thaevanaith Thaedu - காலையில் தேவனைத் தேடு Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.