Karthar Enthan Meippar - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் - Christking - Lyrics

    Karthar Enthan Meippar - கர்த்தர் எந்தன் மேய்ப்பர்


    கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
    நான் தாழ்ச்சி அடைவதில்லை
    அவர் கோலும் தடியும் என்னை
    என்றும் தேற்றி நடத்திடும்

    என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
    என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
    என்னை அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
    எனக்கு சமாதான வாழ்வை அளித்தார்

    என் ஆத்துமாவை அவர் தேற்றி
    என்னை அனுதினம் போஷித்து நடத்தினார்
    அவரின் நாம மகிமையினிமித்தம்
    நீதியின் பாதையில் நடத்துகின்றார்

    நான் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    அவர் என்னோடு கூடவே இருக்கிறார்
    என்னை அபிஷேகத்தால் தினம் நிறைத்து
    பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

    என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    அவர் கிருபையும் நன்மையும் தொடர்ந்திடும்
    நான் கர்த்தரின் வீட்டிலே என்றும்
    நீடித்த நாட்களாய் நிலைத்து இருப்பேன்


    Karththar Enthan Maeyppar
    Naan Thaalchchi Ataivathillai
    Avar Kolum Thatiyum Ennai
    Entum Thaetti Nadaththidum

    Ennai Pullulla Idangalil Maeyththu
    En Thaevaikal Yaavaiyum Santhiththaar
    Ennai Amarntha Thannnneeranntai Nadaththi
    Enakku Samaathaana Vaalvai Aliththaar

    En Aaththumaavai Avar Thaetti
    Ennai Anuthinam Poshiththu Nadaththinaar
    Avarin Naama Makimaiyinimiththam
    Neethiyin Paathaiyil Nadaththukintar

    Naan Maranap Pallaththaakkil Nadanthaalum
    Avar Ennodu Koodavae Irukkiraar
    Ennai Apishaekaththaal Thinam Niraiththu
    Paaththiram Nirampiyae Valiyach Seythaar

    En Jeevanulla Naatkalellaam
    Avar Kirupaiyum Nanmaiyum Thodarnthidum
    Naan Karththarin Veettilae Entum
    Neetiththa Naatkalaay Nilaiththu Iruppaen

    Karthar Enthan Meippar - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Karthar Enthan Meippar - கர்த்தர் எந்தன் மேய்ப்பர் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.