Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய் - Christking - Lyrics

    Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய்


    கர்த்தர் துயர் தொனியாய்
    கதறி முகங்கவிழ்ந்தே
    இருள் சூழ்ந்த தோட்டத்தில்
    இதயம் நொறுங்கி ஜெபித்தார்

    1. மரணத்தின் வியாகுலமோ
    மனிதர் துணை இல்லையோ
    தேவ தூதன் தோன்றிடவே
    தருணம் நெருங்க ஒப்படைத்தார்
    துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்

    2. துக்கத்தால் தம் சீஷர்களே
    தலை சாய்த்து தூங்கினாரே
    தம்மை மூவர் கைவிடவே
    தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
    தன்னந்தனிமையிலே – கர்த்தர்

    3. பிதாவே இப்பாத்திரத்தின்
    பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
    ஆகட்டும் உமது சித்தம்
    அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
    ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்

    4. திறந்த கெத்சமெனேயில்
    துணிந்து வந்த பகைஞன்
    என்ன துரோகம் செய்திடினும்
    எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
    என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்

    5. பரமன் ஜெப சத்தமே
    பூங்காவினில் கேட்கிறதே
    பெருமூச்சுடன் அழைக்கும்
    அவரோடிணைந்தே கண்ணீருடன்
    ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்

    6. இயேசு தாங்கின துன்பங்கள்
    என்னைத் தாண்டியே செல்லாதே
    எனக்கும் அதில் பங்குண்டே
    சிலுவை மரணப் பாடுகளால்
    சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்


    Karththar Thuyar Thoniyaay
    Kathari Mukangavilnthae
    Irul Soolntha Thottaththil
    Ithayam Norungi Jepiththaar

    1. Maranaththin Viyaakulamo
    Manithar Thunnai Illaiyo
    Thaeva Thoothan Thontidavae
    Tharunam Nerunga Oppataiththaar
    Thunpa Sumai Sumanthaar - Karththar

    2. Thukkaththaal Tham Seesharkalae
    Thalai Saayththu Thoonginaarae
    Thammai Moovar Kaividavae
    Thooramaay Kadanthae Thikilatainthaar
    Thannanthanimaiyilae - Karththar

    3. Pithaavae Ippaaththiraththin
    Panginai Naan Aettukkonntaen
    Aakattum Umathu Siththam
    Athu Neengidumo Enturaiththaar
    Aa! Iraththa Vaervaiyudan - Karththar

    4. Thirantha Kethsamenaeyil
    Thunninthu Vantha Pakainjan
    Enna Thurokam Seythitinum
    Enthan Sinaekithanae Entalaiththaar
    Enna Maa Anpithuvo - Karththar

    5. Paraman Jepa Saththamae
    Poongaavinil Kaetkirathae
    Perumoochchudan Alaikkum
    Avarotinnainthae Kannnneerudan
    Aaviyudan Jepippaen - Karththar

    6. Yesu Thaangina Thunpangal
    Ennaith Thaanntiyae Sellaathae
    Enakkum Athil Pangunntae
    Siluvai Maranap Paadukalaal
    Seeyonil Sernthiduvaen - Karththar

    Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய் Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய் Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.