Kartharukku Kaanikaiyitho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ - Christking - Lyrics

    Kartharukku Kaanikaiyitho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ


    கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
    கர்த்தருக்குக் காணிக்கை இதோ

    கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
    பத்திலொன்று நான் கொடுப்பேன்
    சத்தியக் கிறிஸ்து நாதர்
    சபையை வர்த்திக்கவேணும்

    அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்
    அறிவு வளர வேணும்
    தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்
    சகலரும் போற்ற வேணும்
    கனிவாய்ப் போதகர் வேதம்
    கற்றறிந்து சொல்லவேணும்
    கணக்காய் இதன் செலவு
    கட்டி வரவேணும் அய்யா

    ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு
    அனைத்திலும் தந்ததையே
    மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்
    வள்ளற்குச் செய்பொருத்தனையே
    ஆண்டவர் பரன் அவர்கட்
    கனைத்தும் ஆசீர்வதித்துத்
    தாபரம் மதடி கீழ்த்
    தந்தளித்த தெல்லாங் கேட்டேன்

    கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை
    கூடினதைக் கொண்டிதோ வந்தேன்
    நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்
    நாலாவகை வரத்திற் கொஞ்சம்
    புஞ்சை பல போகத்திலும்
    போட்டு வைத்தே னான்குறுணி
    புத்தகக் கணக்கில் கண்ட
    தித்தனை தொகையுமாச்சு


    Karththarukkuk Kaannikkaiyitho Thammaiyae Thantha
    Karththarukkuk Kaannikkai Itho

    Karththarukkuk Kaannikkaiyaayp
    Paththilontu Naan Koduppaen
    Saththiyak Kiristhu Naathar
    Sapaiyai Varththikkavaenum

    Aniyaayam Neenga Vaenum Ulakilae Mey
    Arivu Valara Vaenum
    Thaniyaeka Meyththaevanai Nanthaesaththil
    Sakalarum Potta Vaenum
    Kanivaayp Pothakar Vaetham
    Kattarinthu Sollavaenum
    Kanakkaay Ithan Selavu
    Katti Varavaenum Ayyaa

    Aapirakaam Paththilontaiyae Melkise Thaekkukku
    Anaiththilum Thanthathaiyae
    Maa Piriyamaaka Vaasiththaen Israyael Peththael
    Vallarkuch Seyporuththanaiyae
    Aanndavar Paran Avarkat
    Kanaiththum Aaseervathiththuth
    Thaaparam Mathati Geelth
    Thanthaliththa Thellaang Kaettaen

    Konjang Konjamaakach Serththaen Itho Iththanai
    Kootinathaik Konntitho Vanthaen
    Nanjaivilaivini Lorpaakam Serththu Vaiththaenaan
    Naalaavakai Varaththir Konjam
    Punjai Pala Pokaththilum
    Pottu Vaiththae Naankurunni
    Puththakak Kanakkil Kannda
    Thiththanai Thokaiyumaachchu

    Kartharukku Kaanikaiyitho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ Kartharukku Kaanikaiyitho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.